பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ജ് பழங்கதைகளும் பழமொழிகளும் د ۰ ه م ه • ه . . . . « . ه . ه 18 গুঞ্জ தனித்தனி சமுதாயத்தை மட்டும் ஆராய்ந்தால் இப்பரிணாம வளர்ச்சிப் போக்கைக் காண்பது இயலாது. இது ஸ்பென்சரின் கருத்து. எனவே சமூக மானிடவியல்களில் ஒப்பீட்டு ஆய்வு முறையின் தேவையை ஸ்பென்சர் வலியுறுத்தினார். பண்டைக் கால சமுதாயங்களைப் பற்றிக் கற்பனையான வளர்ச்சிக் கட்டங்களை வரையறுத்துக்கொண்டு தடம் புரண்டு வழி கண்டுபிடிக்க இயலாமல் குழம்பி நின்ற மானிடவியலாருக்கும் சமூகவியலாருக்கும், அவர் தற்காலத்தில் சமூக வளர்ச்சியில் பின் தங்கி லாவேஜ் நிலையிலும், பார்பரிஸ் நிலையிலுமுள்ள பழங்குடி மக்களது சமுதாயங்களை ஒப்பியல் ஆய்வு செய்து, அவற்றை முற்கால மக்களது தொல்பொருள் எச்சங்களோடு (அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கும்) ஒப்பிட்டுப் பழங்கால சமுதாயங்களின் வளர்ச்சிநிலை, சமுதாய அமைப்பு, பண்பாடு முதலியவற்றை அறிந்து கொள்ளவேண்டும் எனப் போதித்தார். இதன் மூலம் உலக சமுதாயங்களின் ஒற்றை வழி வளர்ச்சிப் போக்கில் வளர்ந்துள்ளதை அனுமானம் செய்வதற்குரிய ஆதாரங்கள் கிடைக்குமெனக் கூறினார். 1891-ல் வெளியான பண்டையச் சட்டம் (Ancientia)என்றஹென்றிமெய்னியின் நூலிலும், திருமண நிறுவனம் (The Institution of marriage) Sigirp GinéGloušrassroflás Essógth, ஸ்பென்சரின் கொள்கையைப் பின்பற்றி ஆய்வு முறைகள் அமைக்கப்பட்டுள்ளன. - பண்பாடு பற்றி ஸ்பென்சரின் கொள்கை வருமாறு: “மனித இனத்தின் பல்வேறு சமுதாயங்களின் நிலைகளை பொதுக் கொள்கைகளின் வெளிச்சத்தில் ஆராய வேண்டுமானால், அது மனித சிந்தனை, மனிதச் செயல்கள் ஆகியவற்றின் பொதுவிதிகளை ஆராய்வதாகவே முடியும். உலகம் முழுவதும் நாகரிகத்தின் ஒற்றுமைகளைக் கவனிக்கும்பொழுது பொதுவான செயல்களுக்குப் பொதுவான காரணங்கள் இருக்கவேண்டும் என்று அனுமானிக்கலாம். வேறுபட்ட பலநிலைப் பண்பாடுகள் ஒரு வழிப்போக்கான வளர்ச்சியின் பல கட்டங்களே என்பதையும், ஒவ்வொரு காலகட்டத்தின் பண்பாட்டு நிலை பழமை வரலாற்றின் விளைவெனவும், அவ்வக்காலகட்டத்தின் செயல்கள் வருங்காலத்தைப் பாதிப்பவை எனவும் அறியலாம்.” ஸ்பென்சர், சமுதாயங்களின் நம்பிக்கைகளையும் சமுதாயங்களின் நிறுவனங்களையும் ஒப்பிட்டார். ஆனால் அவற்றின் பண்பாட்டையும்,