பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జీః o 22 . . . . . ъ е в е ъ е а பழங்கதைகளும் பழமொழிகளும் ಇಣ பாபிலோனிய பண்டைய நாகரிகத்தை ஆராய்ந்து கார்டன் சைல்டு" கூறுவது இங்கு கவனிக்கத் தக்கது: “பார்பரிஸ்க் காலத்திலிருந்து நாகரிக காலத்திற்கு ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டும் அகழ்வாராய்ச்சித் தலங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இரண்டு தலங்களை அகழ்வாராய்ச்சியாளர் மிஸோலிதிக் அல்லது நியோலிதிக் பண்பாட்டுக்காலத் தலங்களாகக் கருதுகின்றனர். அதன் பின்னர் நான்கு கால வரிசைப்படி முறையான பண்பாட்டுக் கட்டங்களைக் காட்டும் தலங்கள் உள்ளன. தானியங்களைப் பயிரிடுதல், ஆடு மாடு வளர்த்தல் முதலிய தொழில்களில் ஈடுபட்டு நிலையான கிராமங்களில் வாழ்ந்த மக்களின் சுவடுகளை அகழ்வாய்வாளர்கள் கண்டுள்ளனர். உணவு சேகரிப்பும், மீன் பிடித்தலும் இங்கிருந்த மக்களின் தொழில்களாயிருந்தன. நிலைத்த கிராமங்களுக்கருகே ஆடு, மாடு மேய்த்த குழுக்களும் இருந்தன. இவையிரண்டும் நாகரிகத்தை நோக்கி முன்னேறின. நாகரிகத் துவக்க காலத்தில் பாபிலோனியாவில் பல சிறு நகரராஜ்யங்கள் இருந்தன. அவை ஒன்றோடு ஒன்று போரிட்டுக் கொண்டன. அந்த நகரங்களின் போர் வீரர்கள் செம்புக் கோடாரிகள், ஈட்டிகள், கத்திகள், தலைக்கவசங்களைப் பயன்படுத்தினர். ஹாலாபியன் காலகட்டத்தில் பெண்களின் உருவச்சிலைகள் காணப்படுகின்றன. சரித்திர காலகட்டத்தில் இவை இஷ்டாரின் உருவங்களாக இருக்கலாம். அதற்குப் பின்னுள்ள காலகட்டத்தில் ஆண் சிலைகள் அருகியே காணப்படுகின்றன.” இச் சான்றுகளிலிருந்து இக் கதைகளைப் புனைந்தவர்களது வாழ்க்கை நிலையை அறிகிறோம். முழுக்கதையையும் வழங்கி வந்த பண்டைய பாபிலோனிய மக்கள் நாகரிக முற்காலத்தவர். மொரோடாக்கை ஏக தெய்வமாக வழிபட்டவர்கள் தங்கள் நகர ராஜ்யங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரரசன் கீழ் வந்தபொழுது, பல தேவர்களுக்கும் மேலாக ஒரு தேவனை, ஒரு தேவராஜனை கற்பனை செய்தல் இயல்பே. இந்த நாகரிகத் துவக்க காலத்துக்குமுன், மொரோடாக் தியாமத்தோடு போராடி அவளைக் கொன்றான். மொரோடாக்