பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

കി 30 . . . . . . . . . . . . . . * * பழங்கதைகளும் பழமொழிகளும் ಇಣ 3. ஆதி காலத்தில் பூமித்தாய் குழப்பத்திலிருந்து தோன்றி, உறங்கும்பொழுதே யூரானஸைப் பெற்றெடுத்தாள்." அவன் வானத்திலிருந்து அவளை அன்போடு நோக்கி அவளுடைய இரகசியமான பள்ளத்தாக்குகளை நோக்கி மழை பொழியச் செய்தான். அவள் புல், மலர், மரம், விலங்குகள், பறவைகள் முதலியவற்றை இடத்திற்கேற்பப் பெற்றெடுத்தாள். இம்மழையே ஆறுகளையும், கடல்களையும் உண்டாக்கியது. அவளுடைய முதற் குழந்தைகள் அரைகுறை மனித உருவமுடையவர்களாக இருந்தனர். பிரையேரியஸ், கைகெஸ், காட்டுஸ் என்ற நூறு கைகளையுடைய அரக்கர்கள் பிறந்தனர். பின்னர் ஒற்றைக் கண்ணுடைய சைக்ளாப்ஸ் என்னும் அரக்கர்கள் பிறந்தனர். இவர்கள் பெரிய சுவர்களைக் கட்டினார்கள். இரும்பு வேலை செய்யும் கொல்லர்களாகவும் இருந்தார்கள். இவர்களைத் தான் ஒடிஸியூஸ் ஸிஸிலியில் பார்த்தான். அம்மூவரின் பெயர்கள் பிரான்டீஸ், ஸ்டிரோப்ஸ், ஆர்கெஸ், இவர்களுடைய ஆவிகள் எட்னா எரிமலையின் குகைகளில் இருந்தன. அப்பாலோ அவைகளைக் கொன்றான். ஒலிம்பிய மலைச்சமயத்தில் தந்தைவழிச் சமுதாயப் புனைகதையான யூரானஸின் கதை புகுந்துவிட்டது. யூரானஸ் என்ற சொல்லுக்கு வானம் என்பது பொருள். வருணன் என்னும் ஆரிய தேவனோடு யூரானஸ் இணைக்கப்பட்டான். அவனே முதல் தந்தையென்று நம்பப்பட்டான். கிரேக்க மொழியில் யூரானஸ் என்னும் சொல் யூரானா என்னும் பெண்பால் பெயரின் ஆண்பால் சொல்லாகும். யூரானா என்றால் மலைராணி, கோடையின் தேவி, காற்றுத் தேவி, காட்டு மாடுகளின் தெய்வம் என்பது பொருள். யூரான் என்ற பெண் தெய்வம் தான் ஆணாதிக்க சமுதாயத்தில் பால் மாற்றப்பட்டது. ஆண் தெய்வமாகக் கருதப்பட்டிருத்தல் வேண்டும். ஹெலனிக் நாகரிகமுடைய இனக்குழுக்கள் வட கிரேக்கத்தின் மீது படையெடுத்து வந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும் ஒரு புனைகதை யூரானஸ் பூமா தேவியை மணந்துகொண்டான் என்று கூறுகிறது. அவனே முதல் தந்தையென்றும் கூறுகிறது. ஆனால் அவனே பூமாதேவியின் மகன் என்ற புனைகதை இதனோடு முரண்படுகிறது. இது தாய் வழி இனக்குழு மக்களும் தந்தை வழி ஹெலனிக் இனக்குழு மக்களும் போராடிய காலத்திற்குப் பின், பண்பாட்டு