பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTS TTTmYYO SSAAASAAA SAS A SAS A SAS SSAS SSAS 41 இனக்குழு மக்களின் புனைகதைகள் இவ்வுண்மையை வெளிப்படுத்துகின்றன. மயோரி மக்களின் புனைகதையொன்று பின் வருமாறு: எங்கும் ஒரே இருளாக இருந்தது. ஒளியென்பதே சிறிதும் இல்லை. அவர் சுறுசுறுப்பாக இருக்கத் தீர்மானித்தார். சிறிது வெளிச்சத்தை உண்டாக்கினார். ஆயினும் இருள் விலகவில்லை. 'இருள் கீழே இருக்கட்டும். ஒளி மேலே இருக்கட்டும்” என்று பேசினார். அதன்பின், ஒளி உலகம் ஒளி உலகம் என்று கூவினார். தன்னை சூழ்ந்திருந்த நீரைப் பார்த்துச் சொன்னார். தெய்க்காமாவிலுள்ள நீரே, நீ பிரிந்து போ வானம் உண்டாகட்டும்" என்றார். உன்னை நீ பிறப்பித்துக்கொள் பூமியே! என்று சொன்னார். உடனே இயக்கமுள்ள உலகம் அவர் காலடியில் இருந்தது. - இப்படித்தான் பிரிவின்றி இருந்த உலகம் பூமியாகவும், வானமாகவும் பிரிந்தது.' மாய்து மக்களின் புனைகதை இப்படித் தொடங்குகிறது. "துவக்கத்தில் நட்சத்திரங்கள், சூரியன்,சந்திரன் எதுவும் இருக்கவில்லை. எனவே ஒளியும் இல்லை. ஒரு கட்டுமரம் மிதந்து வந்தது. அதில் இருவர் இருந்தனர். ஒன்று கடல் ஆமை. மற்றொன்று இரகசியக் கூட்டத்தின் தந்தை. 'ஆமை மண்ணை நீரினுள் இருந்து வெளிக்கொணர்ந்தது. தந்தை உலகைப் படைத்தார். பிறகு தாவரங்களைப் படைத்தார். அதில் இருந்து 12 வகையான விதைகள் கிடைத்தன.” ஆப்பிரிக்க இனக்குழு மக்களில் ஒரு குழுவினரான பொஷாங்கோக்களிடம் வழங்கி வரும் படைப்புப் புனைகதையும் துவக்கத்தில் உலகம் இருட்டியிருந்ததாகவே கூறுகிறது. "ஆரம்பத்தில் இருள் இருந்தது. நீர் தவிர எதுவும் இல்லை. பம்பா தனித்திருந்தார்.