பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

હા ! ના છ હી હક હતા ના જી. છ છ # છુ છું છે ? பழங்கதைகளும் பழமொழிகளும் கருப்பைகளையும் கடந்து ஒளியையடைந்தான். பூமியின் மேற்பரப்பை அடைந்து சூரியத் தந்தையைக் கண்டு வணங்கினான். கருப்பையில் உழலுகிற மனிதனையும் பிற உயிர்களையும் விடுவிக்க வேண்டினான். சூரியன் மீண்டும் உயிர்களைப் படைத்தான். இப்படைப்பினால் சுதந்திரமான அறிவுக் கூர்மையுடைய மனிதர்களை அவன் தோற்றுவித்தான். பூமித்தாயின் மீது தோன்றியிருந்த நுரையை இவன் கூட்டி ஒன்றாக்கினான். இவ்விணைப்பில் இரட்டைப்பிள்ளைகள் பிறந்தனர். இவர்களுக்கு எல்லாவிதமான மந்திர மாய சக்திகளைச் சூரியன் அளித்தான். இவர்களை மக்களது தலைவர்களாகவும், பிரபுக்களாகவும் நியமித்தான். இவர்கள் வானத் தந்தையால் வளர்க்கப்பட்டு அறிவாளிகளாயினர். வானத் தந்தையைத் தூக்கிச் சென்று அந்தரத்தில் உயரத்தில் நிறுத்தினர். தங்கள் மந்திர சக்திகளாலும், இடி ஆயுதத்தாலும் மலைகளைப் பிளந்து, மேகக் கவசத்தை உடைத்து மனிதர்களோடும், விலங்குகளோடும் கீழே இறங்கினர்; தெய்வங்களென்றும் போற்றப் பட்டனர். மனிதர்கள் முன்னேற அவர்கள் வழிகாட்டினர். இவ்வாறுதான் மனிதர்கள் தோன்றி விடுதலையடைந்தார்கள்." இந்த நீண்டகதையில் மிகப் பழைய அடுக்கு பெண்ணின் படைப்பு. படைத்தவன் கடவுள். இங்கு கடவுள் பழமையான அடுக்கிலிருந்து வேறுபட்டவன். கதையில் முற்பகுதியில் கூறப்படும் கடவுளுக்கு கதையின் நடுவிலும், முடிவிலும் வேலையில்லையென்பதைக் காணலாம். கடவுள் மண்ணை உருட்டி மனித உருவம் செய்தது, அது பெண்ணாக மாறியது எல்லாம் கிறிஸ்தவப் படைப்புக்கதையைத் தழுவியுள்ளது. ஒரே ஒரு வேறுபாடு பைபிளில் முதலில் படைக்கப்பட்டவன் ஆதம் என்ற ஆண்மகன். அவனுடைய எலும்பொன்றை உருவிப் பெண்ணைத் தேவன் படைத்தான். எனவே இது ஸ்பானியப் பாதிரியார் மயோரிக் கதைகளைத் தொகுத்தபோது இடைச்செருகிய கருத்து என்று துணிந்து சொல்லலாம். ஆயினும் இடைச்செருகலில் கூட மயோரிப் பழமையை மறைக்க முடியவில்லை. தாயுரிமை ஆதிக்கம் இருந்ததை கடவுள் முதலில் படைத்தது பெண்தான் என்ற கதைப்பகுதி வலியுறுத்துகிறது. பின்னர் தரையும், வானமும் பிரிந்து சூரியன் தோன்றியது வருணிக்கப்படுகிறது. இது உலகப் புனைகதைகளின் பொதுவான கற்பனையோடு ஒத்துப்போகிறது.