பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

画辐。磁照函憩菲姆磁破]··。。。。。。。。 * 多 ※ g & お & * ● を ※ 3 s を ※ ※ ふ பூமித்தாய் வானத்தந்தை ஆகியோரின் மானிட இயல்புச் செயல்களினால் (Anthropomorphic) உலகமும், மழையும் பனிக்கட்டியும் தோன்றுகிறது. இவற்றுக்குக் காரணமாக இருப்பது நுரையும், குளிரும், வெப்பமுமாகச் சொல்லப்படுகிறது. இச்சக்திகளே மானிட இயல்பு உருவங்களாக வானத் தந்தையாகவும், பூமித் தாயாகவும் இனக்குழுக் கற்பனையில் உருவாக்கப்பட்டுள்ளார்கள். இயற்கைச் சக்திகளை வசப்படுத்த முடியாத காலத்தில் மனித இனக்குழுக்கள் அவற்றை Susorišićlor (Deification of natural forces). பின்னர் தெய்வங்களாக்கப்பட்ட இயற்கை சக்திகள் மானிட இயல்புச் செயல்கள் புரிவதாகவும், அவர்களின் கூடுதலினால் மக்களும் பிற உயிர்களும் தோன்றியதாகவும் கதை சொல்லுகிறது. வானத்தந்தையும், நிலத்தந்தையும் தங்களுடைய மக்களைப் பற்றிக் கவலை கொண்டார்கள். “எப்படி இவர்கள் இடங்களை அறிந்து கொள்வார்கள்?” என்பது முதல் வினா. விடை : முகமூடி கூத்தாடிகளை முகமூடியில் இருந்து அறிவது போல் இவர்கள் ஆண் பெண் வேறுபாடுகளையும் கடல், மலை, காடு முதலிய வேறுபாடுகளையும் அறிவார்கள். முகமூடி நடனங்கள் வேட்டையால் வாழ்க்கை நடத்தும் மக்களிடையே தோன்றிய கலை. எனவே படைப்புக் கதையின் இந்த அடுக்கு இம்மக்கள் வேட்டை நிலையில் படைக்கப்பட்டதாக இருக்கவேண்டும். நான்கு கருவறைகள் என்பது மனிதன், விலங்குப் பிராயமான வாழ்க்கை வாழ்ந்ததைக் குறிப்பிடுகிறது. வேட்டைக்கால மக்கள் தம் முன்னோர் வாழ்க்கையைப் பற்றிய அனுமானம் இது. இதன்பின் அவர்களில் ஒருவன்(மனிதன்தான்) பொஷாய்ன்ஸ்காயா, தனது அறிவுத்திறனால் ஒளிக்கு வருகிறான். அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி சூரியதேவன் இரட்டையரைப் படைத்து அவர்களுக்கு மந்திர சக்தியைக் கொடுக்கிறான். அவர்கள் மந்திரக் கத்திகளாலும், இடிக்கருவிகளாலும் மலைகளையும் மேகங்களையும் பிளந்து மக்களோடும் விலங்கினங்களோடும் பூமிக்கு இறங்குகிறார்கள்.