பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

騷翻。 வானமாமலை . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . மற்றோர் உபநிஷதக் கதை சாவில் இருந்து உலகமும் உலகத்து உயிர்களும் தோன்றியதாகக் கூறுகிறது. பசி என்ற சாவு மறைந்திருந்தது. அது தன்னை (self) படைத்துக்கொண்டது. வணக்கம் செய்துகொண்டே அது நகர்ந்தது. நீர் தோன்றியது. நீரின் நுரை கட்டியாகி நிலமாயிற்று. அதன் மீது சாவு இளைப்பாறியது. தான் செய்த தவத்தால் அது (சாவு) சூடாயிற்று. பிரகாசத்தின் சாரம் தியாக வெளிப்பட்டது. அது மூன்று பிரிவுகளாகப் பிரிந்தது. ஒரு பிரிவு தீயாயிற்று. இரண்டாவது சூரியனாயிற்று. மூன்றாவது பிரிவு மூச்சாயிற்று. சூரியன்தான் பிரம்மம், இதுதான் வேதக்கருத்து. துவக்கத்தில் உலகம் இல்லை. பின்னால் அது இருப்புக்கொண்டது. அது ஒரு முட்டை வடிவம் பெற்றது. ஒர் ஆண்டு அது கிடந்தது. பின்னர் வெடித்தது. அதிலிருந்து வெள்ளியாக ஒரு பகுதியும், தங்கமாக ஒரு பகுதியும் தோன்றின. வெள்ளியாக இருந்த பகுதி உலகமாயிற்று. தங்கமாக இருந்த பகுதி வானமாயிற்று. வெளிப்பகுதியாயிருந்த ஜவ்வு, மலைகளாயிற்று. உள்பகுதியாயிருந்த ஜவ்வு மேகங்களாயின. உள்ளிருந்த நாளங்கள் ஆறுகளாயின. உள்ளிருந்த திரவப்பகுதி கடலாயிற்று. கதையின் இரண்டாவது பகுதி காலத்தால் முந்தியது என்பதை சிந்தனை வளர்ச்சியைக் காண்பவர்கள் உணர முடியும். இது ஒர் ஒப்புமைப் புனைகதை. முட்டை வெடித்துக் குஞ்சு வெளிப்படுவதுபோல உலகம் தோற்றம் கொண்டது என்பது மிகச் சுலபமான ஒப்புமை. ஆனால் முதற்பகுதியில் சிந்தனை வளர்ச்சியைக் காண்கிறோம். சாவு உயிருக்கு எதிர்மாறானது. ஆனால் உயிருள்ளவை சாவில் இருந்து தோன்றியதான கற்பனை விசித்திரமானது. ஆனால் சாவு என்பது எதுவும் இல்லாத வெறுமை நிலையைக் குறிக்கிறது. அதன் செயலால்தான் நீரும் துரையும் தோன்றி நுரையிலிருந்து உலகம் தோன்றியது. பின்னர் சாவு, தீ, சூரியன், காற்று சக்திகளாகப் பிரிந்தது. பிரிவின்றியிருந்த சாவு, மூன்றாகப் பிரிந்தது. . இதிலும் கூட படைப்பு, பொருள் முதல் வாத அடிப்படையிலேயே புனைகதை உள்ளது. சாவு, இயற்கையின் இயங்காத எதிர்மறை நிலை.