பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குச் சென்று வாணிகம் செய்தார்கள், பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க நூலில் இந்தத் துறைமுகம் கமரா என்று கூறப்படுகிறது. கமரா என்பது காவிரிப்பூம் பட்டினம் என்பதன் சுருக்கமாகும். தாலமி என்றும் கிரேக்க யவனர் இத்துறைமுகத்தைச் சபரிஸ் துறைமுகம் என்று கூறுகின்றார். சபரிஸ் என்பது காவிரி என்பதன் திரி.

சோழ நாட்டின் முக்கியமான துறைமுகப் பட்டினமாகையால் காவிரிப்பூம்பட்டினத்தில் சோழ இளவரசர்கள் வாழ்த்திருந்தார்கள், கரிகாற் சோழனுக்குப் பிறகு இருந்த கிள்ளிவளவன் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தான். இவன் காலத்தில் இப்பட்டினத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காவியங்களின் தலைவர்களான கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை ஆகியோர் வாழ்ந்திருத்தார்கள், பேர்போன பௌத்த மதத் தலைவராகிய அறவண அடிகளும் அக்காலத்தில் இப்பட்டினத்தில் இருந்தார்.

காவிரி ஆறு கடலில் கலக்கிற புகர் முழுத்தில் அவ்வாற்றின் வடகரை பேபல் காவிரிப்பூம்பட்டினம் அமைந்திருந்தது. இப்பட்டினம் மருவூர்ப்பாக்கம் பட்டினப் பாக்கம் என்று இரண்டு கூறாகப் பிரித்திருந்தது. இரண்டு பிரிவுக்கும் இடை நடுவில் நாளங்காடி என்னும் தோட்டம் இருந்தது. கடற்கரை யோரமாகக் காவிரி ஆற்றின் கரை மேல் கலங்கரை விளக்கம் அமைந்திருந்தது. கலங்கரை விளக்குக்கு அருகில் கப்பல்கள் வந்து தங்கிய துறைமுகம் இருந்தது. இங்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன. ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களுக்குச் சோழ அரசருடைய அலுவலர்கள் சுங்கம் வாங்கினார்கள். சுங்கம் வாங்கினதற்கு அடையாளமாக அப்பொருள்களின் மேலே சோழ அரசனுடைய முத்திரையைப் பொறித்தார்கள். இதைப் பட்டினப்பாலை கறுகிறது.

நல் இறைவன் பொருள் காக்கும், தொல்லிசைத் தொழில் மாக்கள் . . . . . . . .வைகல் தொறும் அசைவின்றி, உல்கு செயக் குறைபடாது . . . . . . . . நீரினின்று நிலத் தேற்றவும், நிலத்தினின்று நீர்ப்பரப்பவும், அளந்தறியாப்

73