பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


ஏரிகளின் மிகப் பெரும் அமைப்பு மேல்நாட்டுப் பொறியியல் வல்லுநர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வரலாற்றுக்கு முற்பட்ட இவற்றைப் போன்ற மாபெரும் ஏரித் தேக்க முறை இதுவரை வேறெந்த நாட்டிலும் காணப்படவில்லை என்றும் மேல்நாட்டு அறிஞர்கள் பாராட்டுகின்றனர்.102

பாசனக் கால்வாய்கள் தென்னை ஓலையைப் போல் அமைய வேண்டும் என்றும் ஒரு குறிப்பு உள்ளது. அதாவது மத்தியில் உள்ள மட்டை போன்ற பெரிய கால்வாயும், இருபுறமும் ஒலைகள் பிரிவது போல் கிளை வாய்க்கால்களும் இருக்க வேண்டும் என்பது கருத்து. இவற்றை எல்லாம் தொகுத்துக் காணும்போது இவை, பொறியியல் விந்தையாகவே தோன்றுகின்றன.103

கல். மரம், செம்பு, இரும்பு, அரக்கு முதலியவற்றைப் பயன்படுத்தி அவ்வக் காலத்தில் தமிழர் கட்டடக் கலை கோயில்களாகவும், அரண்மனைகளாகவும் வளர்ந்த விதம், கோட்டைகளாகவும், பாதுகாப்புக் கட்டடங்களாகவும் வளர்ந்த விதம் அனைத்துமே அவர்தம் வரலாற்றுச் சிறப்பையும், பண்பாட்டுப் பெருமையையும், பொறியியல் நுண்ணறிவையும் விளக்குவனவாக அமைந்துள்ளன. பிற்கால மாளிகைகளாகிய திருமலை நாயக்கர் மகால் (மதுரை) போன்றவற்றில் இசுலாமியக் கட்டடக் கலைப் பாங்கு விரவியிருப்பதாக அறிஞர் நடன காசிநாதன் போன்றோர் கருதினாலும், அதிலுள்ள முகப்புத் தூண்கள் போன்ற தமிழ்க் கட்டடக் கலைக் கூறுபாடுகள் வியக்கத் தக்கவையாக உள்ளன.104 இன்றைய மொஸைக் (Mosaic) போல் அன்றே சுதை-கண்டசருக்காரை, இளநீர், பனஞ்சாறு-முட்டைச் சாறு போன்றவற்றால் மழுமழுப்பான மேற்புறம் அமைக்கப்பட்டிருக்கும் அழகை மகாலில் காணமுடிகிறது.

▓▓