பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

165



உய்யானவனம் என்பது தெய்வ வழிபாட்டுக்குரிய நறுமலர்களைத் தந்த நந்தவனமாயிருந்தது. கவேர வனம் என்பது காவிரியின் தந்தையாகிய கவேரன் தவம் புரிந்த இடமாகும்.

சம்பாதி வனம் என்பது சூரியகிரணத்தாற் சிறகு இழந்த கழுகரசனாகிய சம்பாதி தவம் புரிந்த வனம் ஆகும்.33

உவ வனம் என்பது புத்த தேவரது பாத பீடிகையைத் தன்பாற் கொண்ட பளிங்கு மண்டபத்தை அகத்தே கொண்டு, பலவகை நறுமலர்களைத் தரும் மரங்களுடன் திகழந்த சோலைவனமாகும்.34

உவ வனத்திற்குள் பளிங்கு மண்டபமொன்று இருந்ததென்றும் அது தன்னகத்துள் இருப்பவர் ஒசையை வெளிப்படுத்தாது, உருவை மட்டும் வெளிக்காட்டும் இயல்பினது என்றும் கூறப்பட்டுள்ளது.35

அப்பளிங்கு மண்டபத்தில் மாணிக்கச்சோதி பரந்த பதும பீடம் ஒன்றும் இருந்திருக்கிறது.36

ஏரிகள், துறைகள்

காவிரி கடலோடு கலக்கும் இடமாகிய சங்கமுகத் துறையில் அமைந்திருந்த நெய்தலங்கானல் என்ற சோலையில் காமவேள் கோட்டம் இருந்தது.37 அந்தக் காமவேள் கோட்டத்துடன் இணைந்தனவாகச் சோமகுண்டம். சூரியகுண்டம் என்னும் பெயருடைய இரண்டு தீர்த்தங்கள் இருந்தன.38

இவை இரண்டும் தீர்த்தங்கள் என்றே சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லாரும்39 பட்டினப்பாலை உரையாசிரியராகிய நச்சினார்க்கினியரும் கூறியுள்ளனர்.40ப–11