பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

வரலாற்றுத் தொன்மையும், பெருமையும், நாகரீகச் சிறப்பும் உள்ள ஓர் இனம் பல துறைகளிலும், பல கலை களிலும் முன்னோடியாயிருந்து தகுதிகள் பெற்றிருத்தல் வேண்டும் என்பதை உய்த்துணரவும் ஆராயவும் முடியும்.

கிரேக்க உரோமானிய இனங்களைப் போல் தமிழின மும் அப்படித் தகுதிகள் பெற்றிருந்ததாகும்.முன்னோடியாயிருந்த பல பழங்கலைகளில் தமிழினமும் முதன்மையான தகுதிகள் பெற்றிருந்தது.

இவற்றுள் கட்டடக் கலை மற்றெல்லாக் கலைகளுக்கும் தாய் போன்றதாயிருந்தது என்பார் பேரறிஞர் ஏ. பி. கண்வின்டே. நகரமைப்புக் கலைக்கும் அது பொருந்தும்.

“கட்டடக் கலையை எல்லாக் கலைகளுக்கும் தாய் என்று அழைப்பார்கள். இன்றும் இது உண்மையே. வடிவத்திலும் அமைப்பிலும் உருவாக்கப்பட்ட பண்பாட் டின் துல்லியமான உருவகம் அது. சமுதாயத்தின் தீவிரமான ஈடுபாடு இல்லாவிட்டால் இந்தக் கலை வளர்ச்சியுறவோ நிறைவடையவோ இயலாது”.

தமிழ்ச் சமூகமும் இத்தகைய தீவிர ஈடுபாட்டுடன் விளங்கியுள்ளது. பழந்தமிழர் இத்தகைய அக்கறையை