பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

228


தெரிகிறது. உறையூர் போலவே வ்ஞ்சி மாநகரமும் இன்று சுவடற்றதாகி விட்டதனால் இவ்வளவே அதன் நகரமைப்பை அறிய இயலுகிறது.

இம்மூன்றும் கோநகரங்கள் என்ற பெயரில் வகைப்படுவதால் ஒரோவழி இங்குத் தொகுத்துரைக்கப்பட்டன. நகரமைப்புப் பற்றிக் காஞ்சி தவிர்ந்த மற்ற இரு நகரங்களையும் நன்கு விவரிக்கப் போதுமான நூற்சான்றுகள் கிடைக்கவில்லை. காஞ்சி பற்றிய நகரமைப்பிலும், புகார் மதுரையோடு ஒத்தவை நீக்கி வேறுபடுவன மட்டும் இங்குச் சுட்டிக் காட்டப்பட்டன.

காஞ்சி நகர் மயில் போல் அமைந்திருந்தது என்னும் உருவகத்துக்கு எடுத்துக்காட்டான வரைபடம் ஒன்று இவ்வாய்வில் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இனி, இந்நகரங்களில் சமுதாயங்கள் அமைந்த முறை பற்றி அடுத்த இயலில் காணலாம். -

குறிப்புகள் :

1. பரிபாடல் திரட்டு 7.

2. ம.ரா. இளங்கோவன், தமிழர் தலைநகரங்கள்,ப. 8.

3. தண்டியலங்கார மேற்கோள் 37 உருவகம்.

4.தண்டியலங்கார உயர்ச்சி வேற்றுமை மேற்கோள், நூற்பா 48.

5. மா. ராசமாணிக்கம், பல்லவர் வரலாறு, ப.254

6. ഥணிமேகலை 28:165-166.

7. ഥணிமேகலை 28:175.

8. ഥணிமேகலை 28:192-205.

9. பெரும்பாணாற்றுப்படை 393.