பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


(4) நரம்பு பிடித்திருந்தால் அக்குடும்பத்தினர் நீடுழி வாழ்வார்கள் என்று பொருள்படும்.

(5) உடையும்போது சிறுபகுதித் துண்டுத் தேங்காய் மூடியினுள் விழுமாயின் அவ்வீட்டில் இரத்தினம் கூடும் என்பர்.

(6) உடையும் தேங்காய் அகலத்தில் இரண்டாக உடையாமல் நீளத்தில் நெடுங்குத்தாகப் பிளக்குமானால் மிக்க துயரம் உண்டாகும். 39

(7) பெரும் பங்கு சிறு பங்கு இன்றிச் சரி பாதியாய் உடையுமாயினும் நன்மை தரும்.

(8) நான்கு அல்லது ஆறு சுக்கல்களாகச் சிதறி உடையுமாயின் மிக்க கேடு பயக்கும்.

(9) தேங்காய் கண்ணுள்ள பகுதியில் உடைந்து அவ்வாறு உடைந்த பகுதி மனைக்குரியவன் மேல் தெறித்து வந்து விழுமாயின் அவனுக்குச் சாவு வரும்.

(10) மேலோடு கழன்று தனியாகப் பிரிந்து உடைத் தால் வறுமை உண்டாகும்.

(11) மேலோடு கழன்று மேலே வந்து விழுந்தால் மனை கட்டுகிறவன் பிணியடைவான்.

(12) ஓடு உடைந்து கழன்று மனையில் விழுந்தால் உரியவன் வீடு வாசலை விற்க நேருமளவு வறுமை அடைய நேரிடும். 40

பொருந்து மனைகள் சில பொருந்தா மனைகள் 41

(1) தெரு அல்லது வீதி மட்டத்தை விட மிகவும் பள்ளமாக இருக்கும் மனையில் வீடுகட்ட முற்படலாகாது. இழக்கு மேற்குத் திசைகளில் நீண்டும் வடக்குத் தெற்குத் திசைகள் சற்றே குறுகலாகவும் இருப்பது நல்லது. பூமி கோணலாக இருக்கக்கூடாது.