பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

பழமொழி நானூறு மூலமும் உரையும்



கூற்றம் உயிர்கொள்ளும் போழ்து குறிப்பறிந்து மாற்றத் உடையாரை ஆராயாது-ஆற்றவும் முல்லை புரையும் முறுவலாய்! செய்வதென் வல்லை அரசாட் கொளின்? குடிகளைப் பேணாது துன்புறுத்துபவன் எமனைப் போன்றவன் என்பது கருத்து.'செய்வதென் வல்லை அரசாட் கொளின் என்பது பழமொழி. - 201 202. செருப்பிற் புகுந்த கல் .

செருக்குடன் நடந்து தகுதியற்ற செயல்களைச் செய்தும், பிறர் தன்னைப் பெரிதாக மதித்தபின் அவர் விரும்பத்தகாத செயல்களைச் செய்தும், கரவுடைய உள்ளத்தை உடையவர் களாகப் பிறரை வருத்துபவர்களே, செருப்பிடையிலே புகுந்து கொண்டு வருத்தும் பருக்கைக் கற்கள் போன்றவராவர்.

தருக்கி ஒழுகித் தகவல்ல செய்தும் பெருக்க மதித்தபின் பேணாத செய்தும் கரப்புடை யுள்ளம் கனற்று பவரே செருப்பிடைப் பட்ட பரல். கரந்த உள்ளமுடைய கொடியவர்கள், எப்போதும் தம்மைச்சேர்ந்தவர்களுக்கு வருத்தம் தருவதையே தொழிலாகக் கொண்டிருப்பார்கள் என்பது கருத்து. ‘செருப்பிடைப் பட்ட பரல்’ என்பது பழமொழி. - 202 203. வேங்கைப் பூவும் செல்வமும் * * w

பல நாட்களும் நின்றிருந்தபோதும். தான் பூத்ததற்கு உரியதான நல்ல நாளினை அறிந்தே, கணியாகிய வேங்கை பூக்கும். அதனால், மன்னர்கள் மகிழுமாறு அவர்ை வழிபட்டு நடந்துவந்தாலும் செல்வமானது வந்து சேரும் ஆகூழ் வரும் போதே வந்துசேரும் -

பன்னாளும் நின்ற விடத்தும் கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்-மன்னர் உவப்ப வழிபட் டொழுகினும், செல்வம் தொகற்பால போழ்தே தொகும். வேங்கைமணக்கும் காலம் மணம் வாய்க்குங்காலம்.அது பற்றி அதனை மணநாள் குறிக்கும் கணி.என்றார்.எல்லாம் ஆகிற காலத்தில் தானே ஆகும் என்பது கருத்து. 'தொகற்பால போழ்தே தொகும்’ என்பது பழமொழி. 203