பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

115



அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை நல்லது செய்வார் நயப்பவோ?--ஒல்லொலிநீர் பாய்வதே போலும் துறைவ! கேள்; தீயன ஆவதே போன்று கெடும்.

பாவிகளின் பொருளை ஒருபோதும் நல்லவர் விரும்ப மாட்டார் என்பது கருத்து. ‘தீயன ஆவதே போன்று கெடும்’ என்பது பழமொழி. அவர் பொருளாக்கமும் விரைவிற் கெடும் என்பது முடிவு ஆவதே போன்று தோன்றினாலும் முடிவிற் கெடும் என்பது கருத்து. 238. ஏசுவதன் கேடு

தாமரை மல்ரினும் அழகுடையதாக விளங்கும் அகன்ற கண்களையுடையவளே! தம்மனம் நோவுமாறுதம்மை வைதவர் களைத் தாம் பொறுக்கமாட்டாது கோபித்தெழுகின்ற தன்மை உடையவர்கள், தம் நாவால் ஒருவரை வைதனர் என்றால், அந்த ஏச்சானது தன் வீட்டிற்குத் தானே தீ வைக்கும் தன்மையோடு பொருந்துவதாகும்.

நோவ உரைத்தாரை தாம் பொறுக்க லாகாதார் நாவின் ஒருவரை வைதால், வயவுரை பூவிற் பொலிந்தகன்ற கண்ணாய்! அதுவன்றோ தீயில்லை ஊட்டும் திறம். தம்மை வைதவரைப் பொறுத்தலே பெருந்தன்மையும் புகழுமாம்; அன்றி, இகழ்தலோ அவை தராது இழிவே தருவதால் தன் வீட்டுக்குத் தானே கொள்ளி வைத்தது போன்றதாகும் என்பது கருத்து. ‘தீயில்லை ஊட்டும் திறம்’ என்பது பழமொழி. - 238

239. எந்த நட்பும் பயன் தரும் ... •

காட்டினையும் வெற்றி கொண்டு ந்றுமணங் கமழுகின்ற கூந்தலையுடையவளே! தன்னோடு நட்புடையதாயிருந்தால், நாயும் நல்லமுயலைக் கொணர்ந்து உண்பியாதோ? அதனால், தாம் நட்புச்செய்து வாழ்வதற்குத்தகுதியுடையவர்தாமா என்று ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டியதில்லை. யாருடைய நட்பேயா னாலும், அந்த நட்பை விடாது கொள்ளுதலே வேண்டும். . .

தாம்நட்டு ஒழுகுதற்குத் தக்கார் எனல் வேண்டா, யார்நட்பேயாயினும் நட்புக் கொளல்வேண்டும்