பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

பழமொழி நானூறு மூலமும் உரையும்



பகைமைகொண்டுநடத்தல், காட்டினிடத்தே சென்றால் தீயநாய் கரடியையும் எழுப்புவதைப் போன்றதாகும்.

பெரியாரைச் சார்ந்தார்மேல் பேதைமை கந்தாச் சிறியார் முரண்கொண்டு ஒழுகல்-வெறியொலி கோனாய் இனம்வெரூஉம் வெற்ப! புலம்புகின் தீநாய் எழுப்புமாம் எண்கு. கரடியை எழுப்பும்தியநாய்அழிவதுபோல,பெரியாரைச் சார்ந்தவரிடமும் முரண்கொண்டாரும் அழிவர் என்பது கருத்து."தீநாய் எழுப்புமாம் எண்கு என்பது பழமொழி.எண்கு - கரடி தீநாய் -செந்நாய், கோனாய்-ஓநாய். 235 236. திருவுடையார்க்கு நன்மைதான்

தேனையுடைய பூக்கள் நறுமணம் வீசிக் கொண்டிருக் கின்ற கடற்சோலைகளையுடைய, விரிந்த அலைகள் வீசும் குளிர்ந்த கடற்கரை நாட்டிற்கு உரியவனே! இது மிகவும் தீமை தருவதாகும் எனப் பிறர் கருதும் வகையிலே பொருந்திய தொன்றும், செல்வம் ஆகிவரும் நல்வினை உடையவர்களுக்கு மிகவும் நல்லதாகவே முடியும். அதனால், நல்ல அதிர்ஷ்டம் உடையவர்களுக்குத் தீமைதரும் நாட்கள் என்பது எதுவுமே இல்லை என்றறிவாயாக -

இதுமன்னும் தீதென்று இசைந்தது.உம் ஆவார்க்கு

அதுமன்னும் நல்லதே யாகும்--மதுமன்னும்

வீநாறு கானல் விரிதிரைத் தண்சேர்ப்ப

தீநாள் திருவுடையார்க்கு இல்.

நல்ல வினைப்பயன் உள்ளவர்களுக்குத் தீநாளும்

நன்னாளாகவே முடியும் என்பது கருத்து. தீநாள் திருவுடை யார்க்கு இல்’ என்பது பழமொழி. நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல் என்பதையும் இங்கே நினைக்கலாம். 236 237. பாவிகளின் பொருள்!

ஒல்லென்று ஒலிக்கின்ற கடல் நீரானது பார்மேல் ஏறிப் பாய்வது போலத் தோன்றும் துறைகளுக்கு உரியவனே; கேளாய்-தீமையானவை எல்லாம், ஆகிவருவது போன்று முதலிலே காணப்பட்டாலும் உறுதியாகக் கெட்டே போகும். ஆதலால், பாவத்தைச் செய்பவர்களுடைய அரிய பொருளால் வரும் ஆக்கத்தை,நல்லவைகளைச் செய்து வாழ்பவர் என்றாவது விரும்புவார்களோ? விரும்பார். -