பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

பழமொழி நானூறு மூலமும் உரையும்



அவையில் தன் சொற்களை ஆதரிக்குமாறு பேசுவதே சொல்லாற்றல் ஆகும். அவையிடத்துத் தோல்வியே நேரும் என்றால், அத்தகைய ஒன்றைச் சென்று உரைப்பதே தவறு. ‘தோற்பன கொண்டு புகாஅர் அவை என்பது பழமொழி.247 248. முட்டாளின் கேள்வி!

தம்முடைய மானமும் நாணமும் இன்னவென்றே அறியாத வரான தன்மையுடையோர், தம்முடைய மதியானது மயங்கியவர்களாக, அறிவான செய்திகளை ஆராய்ந்து அறிந்து கொண்டிருப்பவர் கூடியிருக்கும் சபையிலே சென்று, தாமும் இருந்து கொண்டு, ஞான விஷயங்களைப் பற்றி வினாவி உரைத்தல் கேலிக்கு இட மாகும். பகல் நேரத்திலேயே யானையின் பல்லைப் பிடித்துக் காண முயல்பவன் செயல் போல அதுவும் நகைப்பிற்கே இடமாகும்.

மானமும் நாணும் அறியார் மதிமயங்கி ஞானம் அறிவார் இடைப்புக்குத் தாமிருந்து ஞானம் வினாஅய் உரைத்தல், நகையாகும் யானைப்பல் காண்பான் பகல்.

கேள்வியாலும் விடையாலும், அறிவுடையவனே ஒரு பொருளை ஆராய்ந்து நுட்பம் காணலாம்; அறிவிலிக்கு அது இயலாது.அவன் முயன்றால், மானமும் நாணமும் கெடநேரும் என்பது கருத்து. நகையாகும் யானைப்பல் காண்பான் பகல் என்பது பழமொழி 248 249. பகுத்து உண்டு வாழ்க!

கொடுப்பதற்கு முடிந்த ஒன்றைக்கொடுக்கலாம்.கொடுக்க முடியாததை இல்லை என்றும் சொல்லலாம். அதனால் பழியில்லை. அதுவே உலகத்து இயற்கையும் ஆகும். அப்படி யில்லாமல், ‘இவன் எனக்கு உணவு தருவான்’ என்று நம்பி ஆசைகொண்டு வந்தவன் ஒருவன் பசியோடு காத்து நிற்க, அவனோடு, உள்ளதை ஒருவன் பகுத்து உண்ணாமல் இருந்தான் என்றால், அது மிகவும் பழியானதாகும். பசித்து வந்தவனின் ஆர்வத்தைக் கொன்ற அவன், சென்று பெறுவதான மோட்ச உலகம் என்பதும் யாதுமில்லை.

இசைவ கொடுப்பது உம் இல்லென் பதூஉம் வசையன்று வையத்து இயற்கை;--அஃதன்றிப் பசைகொண் டவனிற்கப் பாத்துண்ணா னாயின் நசைகொன்றான் செல்லுலகம் இல், ,