பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

பழமொழி நானூறு மூலமும் உரையும்



நினைந்து தெரியானாய் நீள்கயத்துள் ஆமை நனைந்துவா என்று விடல்.

தொலைவிலுள்ள ஒரு செயலை முடிப்பதற்கு வஞ்சகனை நம்பி அனுப்பினால், அதன் பயனை எல்லாம் அவனே கவர்ந்து கொள்வான்; அனுப்பியவனுக்கு இழப்பே ஏற்படும் என்ப்து கருத்து. நீள் கயத்துள் ஆமை நனைந்து வா என்று விடல் என்பது பழமொழி. . - 275 276. தவம் எது?

'தவம்’ என்று சொல்லப்படுவது,பற்பல சமயத்தார்களும் தத்தமக்கு என்று வேறுவேறாகக் கொண்டுள்ள புற வேடங்கள் அன்று தன்னை ஒருவன் சிதைத்துத் துன்புறுத்தினாலும், மற்றொருவன் சந்தனம் பூசி மகிழ்வித்தாலும், அந்த இருவர் பாலும் ஒத்த மனம் உடையவனாக, நுகத்தின் நடுவிலே நிற்கும் பகலாணியைப்போல, அவ்விரு திறத்தாருக்கும் நடுவணாக நின்று ஒழுகும் சால்பு இருக்கிறதே அதுவே சிறந்த தவமாகும்.

தத்தமக்குக் கொண்ட குறியோ தவமல்ல செத்துக, சாந்து படுக்க, மனன்--ஒத்துச் சகத்தனாய் நின்றொழுகும் சால்பு, தவமே, நுகத்துப் பகலானி போன்று. i

தவமானது நன்மை தீமைகளை ஒன்றாகக்கருதி, அனைவரி டமும் அருளுடன் இருத்தல் என்பது கருத்து. 'நுகத்துப் பகலாணி போன்று என்பது பழமொழி. 276 277. தன் வாயால் கெடுதல்

நல்லவளே! மணலினுன்ளே முழுகி மறைந்து கிடக்கின்ற தான ஒரு தவளையும், தன் குரலைக் காட்டிக் கத்திக் கொண்டி ருக்கிற தன்னுடைய வாயின் செயலாலேயே அழிவு எய்தும். அதுபோலவே பிறரைப்பற்றிய பொல்லாங்கான பேச்சுக்களைப் பேசிவிட்டு மறைந்து திரியும் பேதையும், தன்னுடைய சொல்லி னாலேயே தன்னைத் துயரத்தினுள் அகப்படச்செய்து கொள் பவன் ஆவான். -

பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்--நல்லாய்! மணலுள் முழுகி மறைந்துகிடக்கும் நுணலுந்தன் வாயால் கெடும்.