பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

147



303. தரவேண்டிய வரியை வசூலித்தல் . தன்னுடைய ஆணைக்கு உட்பட்டு அடங்கிவாழ்பவரான குடிமக்கள் என்றாலும், அவர்கள் மீதும் அதிகமான வரிப்பணம் வசூலிக்கப்படாமல் மிகுதியாக நிலுவையாக நிற்பது விரும்பத் தக்கதன்று. அறுவடையில் அன்றிச் சூடடிக்கும் அந்தக் காலத்திலேயானாலும் கூடக் கிடைக்கும் பகுதிப் பொருளை வசூலித்துவிட வேண்டும். ஆராயுங் காலத்தே பசுவிலே நேரத்தில் தவறாமல் பாலைக் கறக்காமல், சேரக் கரக்கலா மென்று விட்டுவைத்தால் பால் மடியில் பால் ஊறுவதுங்கூட இல்லாமற் போய்விடும் என்பதே உண்மை ஆகும்.

பாற்பட்டு வாழ்ப எனினும் குடிகள்மேல் மேற்பட்ட கூட்டு மிகநிற்றல் வேண்டாவாம்; கோற்றலையே யாயினும் கொண்டிக் காணுங்கால் பாற்றலைப் பாலூறல் இல். அரசனானவன், வரிவசூல் காலங்கடத்தாமல் இருக்க வேண்டும் என்ற நீதியைக் கூறுவது இது.‘பாற்றலைப்பாலுறல் இல் என்பது பழமொழி. . . . 303 304. பழிக்கு மருந்து

தண்மையான கடல்நாட்டுத் தலைவனே! மருந்தினாலே தணித்துக்கொள்ளாமல் வாளர்துவிட்டுவிட்டால் ஒருவனுக்கு வந்த நோயானது அவனுடைய உயிரையே அழித்துவிடும். ஆதலால், தம்முடைய தகுதிக்குப் பொருந்தாத பழியென்று சொல்லப்படுகின்ற பொல்லாத நோய்க்கு மருந்து போல நடப்பதே மாட்சியான பண்புகள் உடையவராயிருத்தல் என்பதை அறியவேண்டும். - - பொருந்தாப் பழியென்னும் பொல்லாப்பிணிக்கு மருந்தாகி நிற்பதாம் மாட்சி--மருந்தின் தணியாது விட்டக்கால், தண்கடல் சேர்ப்ப! பிணியீடழித்து விடும். -

நோய் தீர்ப்பது மருந்து; அதுபோலப் பழியைப் போக்குவன மாட்சியுடைய ஒழுக்கங்கள் என்பது கருத்து. "பிணியீ டழித்து விடும்’ என்பது பழமொழி, அதனை உடனுக்குடனேகளையவேண்டுமென்பது தெளிவு.இப்படியே பழியையும்போக்கவேண்டும் என்பதும் கூறப்பெற்றது. 304