பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

பழமொழி நானூறு மூலமும் உரையும்



301. அறிஞரே அறிவார் -

நன்மைகள் மிகுதியாக உடைய, அழகிய நீர்வளம் மிகுந்த ஊருக்கு உரியவனே! பாம்பின் கால்களை அதற்கு இனமான பாம்புகளே நன்றாக அறியும் திறம் உடையன. அதுபோலவே, அறிவுத்திறத்தால் மிக்கவர்களுடைய அறிவின் செழுமையை அறிந்து கொள்ளுதல், அவரைப் போன்ற அறிவால் மிகுந்தவர் களுக்கே முடிவதாகும், அறிவுச் சிறப்பில்லாத சாதாரண மக்க ளுக்கு அவர் சிறப்பை அறிந்து கொள்ளவே முடியாது.

புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம்--நலமிக்க பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே. பாம்பறியும் பாம்பின் கால்.

அறிஞரின் சிறப்பை அறிஞர்களே அறிந்து உணர்ந்து பாராட்டுவர் அல்லாத பிறர் அறிவுச் செழுமையை உணர மாட்டாதார்; ஆகவே, அவர் அறிஞரை மதிப்பதற்கும் போற்றுவதற்கும் அறியார் என்பது கருத்து. பாம்பறியும் பாம்பின் கால்’ என்பது பழமொழி. 301

t

302. பிறரால் முடியுமா?

பரந்து செல்லும் ஆறுகள் அருவிகளாக வீழ்ந்து சென்று கொண்டிருக்கின்ற வளமுடைய மலைநாடனே! தம்மாலே செய்து முடிக்கக்கூடிய ஒரு செயலினைத் தாமே முயன்று செய்தலே முறைமையாகும். அஃதன்றி, தாம் செய்யாது சோம்பியிருப் பவர்கள், அதனை வேறொருவராலே தாம் செய்வித்துக் கொள்வோம்’ என்று கருதியிருத்தல் அவர் அதனைச் செய்யாது போவதையே காட்டும். வெந்நீரில்கூட குளிக்கத் துணியாதவர்கள், என்றாவது தீப்பாய்ந்து வருவார் 5(δοππ?

தம்மால் முடிவதனைத் தாமாற்றிச் செய்கலார், பின்னை ஒருவரால் செய்வித்தும் என்றிருத்தல், சென்னி அருவி மலைநாட! பாய்பவோ வெந்நீரும் ஆட்ாதார் தீ. தன்னால் செய்ய முடிந்ததைத் தானே செய்யாமல், பிறரால் செய்வித்துக் கொள்வோம் என்றிருப்பவனின் காரியம் ஒரு போதும் நிறைவேறாது என்பது கருத்து. ‘பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ என்பது பழமொழி. 302