பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

பழமொழி நானூறு மூலமும் உரையும்



நெடு நாளைய நண்பராயிருந்தும் அன்பில்லாதவரின் உறவைப் பழமையொன்றே கொண்டு பேணாது கைவிடுதலே நல்லது புதியவரானாலும் அன்பிருந்தால் அவரை நட்பாகக் கொள்க என்பது கருத்து. முழநட்பிற் சானுட்கு நன்று' என்பது பழமொழி. - 359 360. தவறான பதில்

வினாவுவானும், அதற்கு விட்ை கொடுப்போனுமாக இருவர் தம்முள் சேர்ந்து தொடங்கிய சொற்போரினுள்ளே, பின்னாலே விடைகூற வேண்டியவன், தானே முற்பட ஏதாவது சொன்னால், அது எதிராளி சொல்வதை அறியாமலே சொன்ன பிழையான விடையாகும். முழங்காலில் அடி பட்டிருந்த புண் பட்ட ஒருவனுக்கு அவ்விடத்தே கட்டுப் போடாமல், மூக்கிலே கட்டுப்போட முயல்பவனின் அறியாமை போன்றதே அது.

துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்திற் பின்னை உரைக்கப் படற்பாலான்--முன்னி மொழிந்தால், மொழியறியான் கூறல், முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு. - "பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குப் பணத்துக்குப் பத்து என்று சொல்பவன்’ என இந்நாளிலே வழங்கும் பழமொழி இதன் கருத்தை விளக்கும். ‘முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு” என்பது பழமொழி. 350 361. துறவார் நிலைமை - -

தம்மிடத்திலே செல்வச்செழிப்பு இருக்கும் வரையிலும், தம்முடைய வாழ்நாள் நீடித்திருக்கும் வரையிலும் சிறந்த நெறி எதுவென்பதைப்பற்றி ஆராய்ந்து தெளிவுகொள்ள மாட்டார் கள். சிற்றின்பங்களிலே செருக்குற்று அவற்றிலேயே நிலைத்து, மனையிலிருந்து மகிழ்வுடனே மனைவிமக்களுடன் வாழ்வார் கள். அறவோர் பள்ளியிடத்திலே சென்று, துறவு நெறி பூண்டு வாழமாட்டார்கள். இத்தகையோர், முள்ளிச் செடியிலே சென்று தேனுண்ணுபவர் போன்ற அறியாமை உடையவர்கள் ஆவர்.

செல்வத் துணையுந்தம் வாழ்நாட் டுணையுந்தாம் தெள்ளி உணரார், சிறிதினால் செம்மாந்து பள்ளிப்பால் வாழார், பதிமகிழ்ந்து வாழ்வாரே முள்ளித்தேன் உண்ணு மவர். -