பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

பழமொழி நானூறு மூலமும் உரையும்



கால எல்லை ஒரு தடையாகாது; என்றும் அதனை நிறைவேற்றவே வேண்டும் என்பது கருத்து. ‘முறைமைக்கு மூப்பிளமை இல் என்பது பழமொழி. 363 364. வெறாது முயல்க

வாழ்விலே துயரம்வந்து சூழ்ந்த காலத்திலே,"இனி எவரும் துணையாக இல்லாதவர் எம்மினும் வேறு எவர் இருக்கிறார் கள்? யாம் தனியராயினோம்? என்று சொல்லி ஒருவர், தாம் சோர்ந்துபோய் முயற்சியின்றி இருத்தல் வேண்டாம்.செயலிலே எவ்வகை வெறுப்புமில்லாமல் நம்பிக்கையுடன் தொடர்ந்து முயன்று வருக வெறுப்பின்றித் தொடர்ந்து முயல்பவர் தாம் எண்ணியதை அடையாமல் ஒருபோதுமே இருப்பது இல்லை.

இனியாரும் இல்லாதார் எம்மிற் பிறர்யார் தனியேம் யாம் என்றொருவர் தாமடியல் வேண்டா; முனிவிலராகி முயல்க முனிவில்லார் - முன்னிய தெய்தாமை இல். . தோல்வியால் மனந்தளராது நம்பிக்கையுடன் தொடர்ந்து முயல்பவரே, வாழ்விலே வெற்றியடைவர் என்பது கருத்து முனிவில்லார் முன்னிய தெய்தாமை இல் என்பது பழமொழி 364 365. கேடு தவறாது வரும்

நெஞ்சமே எதனையும் நெடிதாக ஆராய்ந்து உண்மை உணராமல், நீ எளியை ஆயினாய், பிறரைக்குறித்துக் கொடியது செய்வோம் எனவும் கூறினாய், முற்பகல் வேளையிலே தன் பாதத்தருகே பிறன் தன்னால் கேட்டுக்கு உள்ளானதைக் கண்டு இறுமாந்தவன்,தானே கெடுதலையும்பிற்பகல்வேளைக்குள்ளே கண்டுவிடுவான் என்பதையும் மறவாதே.

நெடியது காண்கிலாய் நீயெளியை நெஞ்சே! கொடியது கூறினாய்; மன்ற-அடியுளே முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் கண்டு விடும். பிறனுக்குக் கேடானவற்றைச் செய்தலால், தனக்கும் கேடுவந்து சம்பவிக்கும் என்பது கருத்து. முற்பகல் கண்டான் பிறன்கேடுதன்கேடுபிற்பகல்கண்டுவிடும் என்பது பழமொழி:365 366. மூத்தார் வாய்ச் சொற்கள் -

மூத்தோரான பெரியோர்களுடைய அறிவுரைகள்,ஒருவன் தானாகவே செய்ய விரும்பாதநல்ல காரியங்களைச் செய்யுமாறு