பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

பழமொழி நானூறு மூலமும் உரையும்



மிகவும் கடினமான செயலாகும்.அது, கிழட்டெருது கொண்டு உழுவதனோடுபொருந்துவதாகும். -

மடியை வியங்கொள்ளின் மற்றைக் கருமம் முடியாத வாறே முயலும்--கொடியன்னாய்! பாரித் தவனை நலிந்து தொழில்கோடல், மூரி உழுது விடல். - உள்ளத்திலே ஊக்கமில்லாத ஒருவனை வேலைக்கு அமர்த்துவது மிகவும் தொந்தரவையே கொடுக்குமென்பது கருத்து. மூரி உழுது விடல்’ என்பது பழமொழி. பாரித்த உடலினனிடம் ஊக்கம் குன்றி விளங்கும் என்பதுமாம். 368 369. கீழோரிடம் வைத்த பொருள் -

புதிய நெய்தற் பூக்கள் மணம் வீசும் விரிந்த அலைகளை உடைய கடற்சேர்ப்பளே! தொடிபொருந்திய முன்கையினையு டைய நல்ல பெண்ணைப் போன்று திரண்டிருக்கும், சிறந்த பொருளைக் குடிச்சிறப்பில்லாதவனிடத்திலே கொடுத்து வைத்தல்,கிழவெருதை உண்பித்த புல்லைப்போல அப்பொருள் அழிவதுடன் பயனற்றதுமாகும்.

தொடிமுன்கைநல்லாய்! அத் தொக்க பொருளைக் குடிமகன் அல்லான்கை வைத்தல்--கடிநெய்தல் வேரி கமழும் விரிதிரைத் தண்சேர்ப்ப! மூரியைத் தீற்றிய புல். - கிழவெருது புல்லைத்தின்னாது குதப்பிக்குதப்பிக் கழித்து விடும்.அதனால் பயன் யாதுமில்லை; புல்லின் சிறப்பும் கெடும். அதுபோலவே பொருளைக் கீழோனிடம் பாதுகாவலாக வைப்பது கெடுமென்பது கருத்து. "மூரியைத் தீற்றிய புல்"என் பது பழமொழி.பொருளைத் திரண்டபெண்ணுக்கு உவமித்தது அதன் சிறப்பைக் கருதியாகும். 369 370. அந்தரங்க விரோதிகள்

இம்மையிலே ஏற்படுவதான பழிச்சொல்லையும், மறுமை யிலே அநுபவிக்க வேண்டியதான பாவத்தையும் நினைத்ததும், தம்மைவிட்டுநீங்காதவராக, உட்ப்கைகொண்டு உறவினர்போல வாழ்ந்தவரின் பால், அதனை உணர்ந்தவர், தாமும் செம்மை யாகப் பகையினை மேற்கொண்டு அவர்பாற் சேராது ஒதுங்கி இருப்பவர்கள் கெட்டவர்களோ? அன்று: அவர்களே அறிவு டையவர்கள்.மாய்மாலக்கண்ணனாக இருப்பதைவிடகுருட்டுக் கண்ணே பெரிதும் நன்மை ஆகும். *.