பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

11



ணறிவு இல்லாதவர்களின் இடையிலேசெல்லவே மாட்டார்கள். ஆராய்ந்து அறிந்த அறிவு உடையவர்களுடன் கலந்து நல்ல பண்புகளை மேலும் அறிவதிலேயே ஈடுபடுவார்கள்.

தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார்

பாரியார் இடைப்புகார், பண்பறிவார், மன்ற; விரியா இமிழ்திரை வீங்குநீர் சேர்ப்ப அரிவாரைக் காட்டார், நரி. பயனுள்ள நெல்லரிவார்க்குப் பயனற்ற நரியைக் காட்டிப் பொழுதை வீணே கழியச் செய்தல் கூடாது. அறிவுடையோரும், அறிவுடையோருடன் கலந்து பழக வேண்டுமே தவிரப் பயனற்ற அறிவற்றோர் கூட்டத்தில் சேர்தலே கூடாது. அரிவாரைக் காட்டார் நரி என்பது, அவரை வேறு ஒன்றில் மனம் திருப்புதல் ஆகும். 19 20. ஈகையே செல்வத்திற்கு அழகு

முழவுகளின் ஒலிபோல அலைகள் முழங்கும், கடல் சூழ்ந்த உலகம் முழுவதையுமே ஒன்றாக ஒரு குடைக்கீழ் ஆண்டவர்

பெருமன்னர்கள்; அவர்களுங்கூடத் திருவிழா நடந்த ஊரிலே

நிகழ்ந்த கூத்தைப்போல மறுநாள் வீழ்ச்சியுற்று அழிதலைப் பார்த்திருக்கிறோம். இருப்பது பிறருக்கு உதவியாகப் போகட் டும் என்று ஒரு பொருளையேனும் மனதாரக் கொடுத்து மகிழா தவனுடைய செல்வமானது, அழகும் வடிவும் உடையவளானஒரு பெண் கண்ணிழந்த குருடியாக விளங்குவதைப் போன்றதாகும்.

முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார். விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும், இழவென் றொருபொருள் ஈயாதான் செல்வம், அழகொடு கண்ணின் இழவு. - அவள் அழகும் வடிவும், அவள் கண்ணிழந்த ஒரு காரணத் தால் தம் பெருமையற்றுப் போவதுபோல, அவன் செல்வமும் அவனது ஈயாத் தன்மையால் பயனற்ற செல்வ மாகும் என்பது கருத்து.'அழகொடு கண்ணின் இழவு என்பது பழமொழி, 20 21. உயர்ந்தவரை உயர்ந்தவர் அறிவார்

அடுக்கடுக்காக விளங்கும் மலைத்தொடர்களையுடைய நாட்டிற்கு உரியவனே மணிகளின் இயல்புகளை உணர்பவர்

களுக்கு, அவை சேறாடி இருந்த காலத்திலும் மணிகளாகவே காணப்படும். அதுபோலவே, தொடர்ச்சி அறாது உயர்ந்து விளங்கும் நல்ல குடியிற் பிறந்தவர்களை, அவர்களுக்கு என்ன