பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

பழமொழி நானூறு மூலமும் உரையும்



நிறைவேற்ற வேண்டும். அன்றி, மறுப்பவர் ஊழியத்திற்கு உதவார் என்பது கருத்து. ஆல் என்னிற் பூலென்னு மாறு என்பது பழமொழி. 37 38. பனைபோலச் செய்யும் உதவி -

பெரிய மூங்கில் வில்லினையும் தன் வடிவினாலே வெற்றி கொண்ட அழகிய புருவத்தையும் உடையவளே! தம்மை விரும்பி வந்து சேர்ந்திருப்பவர்களுக்கும், தம்முடைய சுற்றத்தினர்களுக் கும் அவர்களை வருத்துகின்ற பசித்துன்பத்தினைப் போக்காத வர்கள், யாரோ புதியவர்களுக்கு உதவுதலானது, தன்னை மிகவும் பாதுகாத்து வளர்த்தார்க்கு உதவாது, நெடுங்காலஞ் சென்று, பின்வரும் புதியவர்களுக்கு உதவுகின்ற இயல்பினை யுடைய, கரிய பனைபோலும் தன்மையை உடையதாகும்.

விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும் வருந்தும் பசிகளையார் வம்பர்க்கு உதவல், இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! ஆற்றக், கரும்பனை அன்ன துடைத்து,

செல்வம் உடையவர்களாயிருந்தும், வந்த விருந்து உறவுமான பசித்தவர்க்கு உதவாமற் போனால், அது பயனற்ற செல்வமே, “ஆற்றக் கரும்பனை அன்னது உடைத்து என்பது பழமொழி. 38 39. எளியவன் கண்ணி வலியவனை அழிக்கும்

தம்முடைய குடிப்பிறப்பினாலே பொல்லாத தன்மையை உடையவர்கள் எத்தகைய துணைவலிமையும் இல்லாதவர்கள்; மிகவும் வறுமைப்பட்டிருப்பவர்கள்;பதில் கூறும் சொற்களினா லே நம்பகைவரைப்போன்றிருக்கிறார்கள் என்று.வலியவர் ஒரு வர் அவரை அலைக்கழித்த காலத்திலே, அந்தத் துயரத்தைப் பொறுக்க மாட்டாது, வலியற்றவரான அவர்கள் அழுத கண்ணிர் ஆகிய அவையே அப்படி ஆட்டுவித்தவர்களுக்கு எமனாகி, அவர்களை அழித்துவிடும்.

தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார் மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால் ஆற்றாது அவரழுத கண்ணி அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்த்து விடும்.

எளியாரை வலியார் வருத்தினால், அவரால் அவரை எதிர்த்து அழிக்க முடியாவிட்டாலும் அவர்கள் பெருக்கிய கண்ணிரே அவ்வலியாரை அழித்துவிடும். ஆற்றாது அவரழுத