பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

25



48. அச்சம் உள்ளவனுக்குப் பாதுகாப்பே இல்லை

கோட்டைவாயிலை அடைத்துவைத்துப் பாதுகாவல் பெற்றுக் கோட்டையினுள்ளே இருந்தாலும், போருக்கு ஆற் றாது.அச்சங்கொண்டுஉள்ளேபுகுந்திருப்பவர்,அந்த அச்சத்தின் காரணமாகவே பகைவர்களிடம் எளிதாக அகப்பட்டுவிடுவார் கள். பயந்து, இருளினிடத்தே போய் இருந்தாலும், பறவை யானது, அது உண்மையாகவே இருளினையுடைய இரவாயிருந் தாலுங்கூட, அதனைப் பகலென நினைத்தே அஞ்சும்.

இஞ்சி அடைத்துவைத் தோமாந் திருப்பினும் அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார்-அஞ்சி இருள்புக் கிருப்பினும் வெய்யே வெரூஉம்புள் இருளின் இருந்தும் வெளி. - உள்ளத்திலே,அச்சம் உடையவர்கள் வீரராவது இல்லை; அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதும் எளிதன்று. 'இருளின் இருந்தும் வெளி’ என்பது பழமொழி. இருளில் மறைந்து இருந்தாலும், பகை தன்னைக் கண்டு அழித்து விடுமோ என அஞ்சும் என்பதாம். - 48 49. வாய்ப் பேச்சு வீரர்கள்

நல்ல கல்வியறிவு உடையவர்கள் கூடியிருக்கிற அவை யினைக் கண்டால் தம் நாவைச் சுழட்டி வைத்துக் கொண்டு, நன்மையானவைகளை உணராத புல்லர்களின் கூட்டத்திலே, தம்மைப்புகழ்ந்து பேசிக்கொள்ளுதல்,பகைவரிடத்திலே உள்ள வீரத் தன்மைக்குப் பயந்த ஒருவன், தன் வீட்டின் உள்ளேயே இருந்துகொண்டு, தன் வில்லை வளைத்து நாணேற்றி எதிர்ப் பட்ட பானைசட்டிகளிலே எய்து, தன் போர்த் திறமையைக் காட்டுவதுபோன்றதாகும். -

நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப் புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல்-புல்லார் புடைத்தறுகண் அஞ்சுவான் இல்லுள்வில் லேற்றி இடைக்கலத்து எய்து விடல். - இடைக்கலம்-கருங்கலம், பானை சட்டிகள். புல்லார்பகைவர் இல்லுள் வில்லேற்றி இடைக்கலத்து எய்து விடல்' என்பது பழமொழி. இப்படிச் செய்வது புல்லறி வாண்மை என்பது கருத்து. 49