பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

பழமொழி நானூறு மூலமும் உரையும்


-

54. தற்பெருமை அழிவையே தரும்

உலகம் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்டவன் மாவலி. அவனும்பின் வந்து சம்பவிக்கப் போகின்ற தன் நிலையை ஆ9ாய்ந்து அறியாதவனாயினான்."எனக்கு எல்லாம் முடியும்! எனக்கு எல்லாம் எளிதே என்று, தன் குருவான சுக்கிரர் தடுத்தும் கேளாமல்,செருக்கினால் மிகுந்து இரந்துவந்த வாமனனுக்கு மூன்றடி மண், நீர் வார்த்துக் கொடுத்தான்.அதன் பயன், அனைத்தையுமே இழந்து விட்டான். ஆதலால், குற்ற முடைய ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவர்களுக்குத்தாமே தமக்குக் கொண்டுதர வராத துன்பங்களே இல்லையாகும்.

ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன் மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான் தோஒ முடைய தொடங்குவார்க்கு, இல்லையே தாஅம் தரவாரா நோய். -

குற்றமுள்ள செயலிலே ஈடுபட்டவர் தமக்குத் தாமே துன்பத்தைத் தேடிகொள்ளும் அறியாமை உடையவர்கள் தோஒம்-குற்றம் இல்லையே தாம் தர வாரா நோய்' என்பது பழமொழி - 54 55. அரசனே முறை தவறினால் செய்வது என்ன?

அலைகள் மிகுதியாகப் பொங்கி வருகின்ற கடற்கரைக்கு உரியவனே தன்னுடைய வெண்குடையின் கீழாக வாழ்கின்ற குடிமக்களுக்கு அரசனும், செங்கோன்மை உடையவனாகவே விளங்கவேண்டும..அப்படி இல்லாமற் போனால், அந்த மக்கள் தாம் செய்வதற்கு என்ன இருக்கிறது? யானையானது தொட்டு உண்ணத் தொடங்கிவிட்டால், அதற்கு மூடிமறைத்து வைக்கத் தகுதியான பாத்திரம் என்பது எதுவுமே கிடையாதல்லவா?

வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும் செங்கோலன் அல்லாக்கால் செய்வதென்--பொங்கு படுதிரைச் சேர்ப்ப மற்று, இல்லையே, யானை தொடுவுண்ணின் மூடுங் கலம். அரசன் எப்பொழுதும் செங்கோன்மை உடையவனாக இருக்க வேண்டும். 'கொடுங்கோன் மன்னன் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடே நன்று’ என்பதையும் நினைக்க 'இல்லையே, யானை தொடுவுண்ணின் மூடுங்கலம் என்பது பழமொழி. அரசனே முறைதவறினால் தடுப்பவர் யாரும் இல்லை என்பதாம். v , , 55