பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

பழமொழி நானூறு மூலமும் உரையும்



71. உடை மதிப்புத் தரும்

படுத்து உறங்குவதற்கு ஒர் இடம் என்பதும் இல்லாத வறியராக இருந்தபோதும், நன்றாக உடுத்து வருபவர்களைப் பார்த்துப் பசிக்கு உணவு உண்கிறீர்களோ? என்று கேட்பவர் யாரும் இல்லை அதனால், வீட்டினிடத்தே அழிவு மிகுதியா யிருந்த காலத்தும், ஒருவர் எப்படியாயினும் தம் புறத்தோற்றத் தினால் பொலிவுற்று விளங்குதலே நன்றாகும்.

அகத்தால் அழிவு பெரிதாயக் கண்ணும் புறத்தாற் பொலிவுறல் வேண்டும--எனைத்தும் படுக்கை இலராயக் கண்ணும் உடுத்தாரை உண்டி வினவுவார் இல்.

உயர்குடிப்பிறந்தவர் எத்துணை வறுமைக்கண்ணும்,பிறர் அதனைக் கண்டு தம்மீது கருணை கொள்ளுமாறு தம்மை தாழ்த்திக் கொள்ளமாட்டார்கள் என்பது கருத்து.'உடுத்தாரை உண்டி வினவுவார் இல் என்பது பழமொழி. 71 72. உண்ட வீட்டிற்குத் தீவினை

'பழைய உறவினர் என்று, தம் சுற்றத்தாரையும் தம்மையும் ஏற்றுக்கொண்டவகையாலேயே, தம் குறை அனைத்தும் தீர்ந்து போகுமாறு ஒருவர் கருணையுடன் நோக்கிய காலத்திலே, அப்படிச் சொன்னவரோடு சேர்ந்திருந்து பயன்பெற்றுப், பின் அவரைப்பற்றி ஒருவன் புறங்கூறித் திரிந்தானென்றால், உண்ட வீட்டிற்குத் தீயிடுவது போன்றதே அவன் செய்யும் செயலாகும்.

பண்டினர் என்று தமரையும் தம்மையும் 2 கொண்ட வகையால் குறைசீர நோக்கியக்கால் விண்டவரோ டொன்றிப் புறனுரைப்பின் அஃதாலவ் உண்டவில் தீயிடு மாறு.

உதவின நன்றியை மறந்து புறங்கூறவாரின் இழிதகைமை மிகவும் கொடியது. வெறுக்கத்தக்கது என்பது கருத்து. 'உண்டவில் தீயிடுமாறு’ என்பது பழமொழி. 72 73. வீரன் துரோகம் செய்ய மாட்டான்

தெளிவாக நிறைந்த வலிமையைப் பெற்றனவும், தம்முள் மாறுபட்டனவுமான இரண்டு காளை மாடுகள், ஒரு துறையுள் நின்று நீர் குடிக்குமோ? குடிக்கா, அதுபோலவே, தன் அரசனுக்கு ஒரு துன்பம் வந்துற்றால் தன் உடம்பையும் கொடுக்கக்கூடிய ராஜபக்தி உடையவன் அரசனுக்குப்