பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

39



விட்டாங்கு அகலா முழுமெய்யும் கொள்பவே நட்டாரை ஒட்டியுழி.

சிறந்த நண்பர்கள், நண்பரே தாம் என்று கருதும் கலந்த ஈடுபாடு உடையவர்கள் என்பது கருத்து. "உமையாள் ஒரு பாலாக் கட்டங்கம் வெல் கொடி கொண்டானும் கொண் டான்' என்பது பழமொழி. தண்டு என்றது பகைவரின் பெரும் படையை - - 77 78. உள்ளம் தெரிந்தபின் உறவாடுக

கொல்லுகிற முறைப்படியே கொன்ற பின்னர் அல்லாது, மானின் தசையைத் தின்ன நினைப்பவன், அதனைத் தப்பிப் போக விட்டுவிட்டு, அந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதில்லை. அதுபோலவே, ஒருவர் உள்ளத்திலே நிலவும் அன்பின் தகுதியை அறிந்த பின்னர் அல்லாமல், யாரும், யார்க்கும் தம்முடைய இரகசியத்தை முன்னதாகவே ஒடிச் சென்று சொல்லாதிருப்பாராக.

அன்பறிந்த பின்னல்லால் யார்யார்க்கும் தம்மறையே முன்பிறர்க் கோடி மொழியற்க--தின்குறுவான் கொல்வாங்குக் கொன்றபின் அல்லதுஉயக்கொண்டு, புல்வாய் வழிப்படுவார் இல். -

அன்பின் தகுதியை அறிந்த பின்னரே தம் இரகசியத்தை ஒருவரிடம் சொல்லலாம் என்பது கருத்து. 'உயக்கொண்டு, புல்வாய் வழிப்படுவார் இல் என்பது பழமொழி. 78 79. தகுந்தவரையே சேர்ந்து வாழ்க - - ஆற்றினுள்ளே புரள்கின்ற கயல்மீன்களைப் போல விளங் கும் மையுண்ட கண்களையும், பொற்குழையினையும் உடைய வளே! பெரிதாகத் தோன்றுதல் வேண்டும் என்ற விருப்பமுள்ள வர்கள்,அந்த விருப்பத்தை நிறைவேற்ற ஆற்றலில்லாதவர்களை அடைந்து அவரைப் பின்பற்றி நடத்தல், வண்டிக்கு இடுகின்ற மையினுள்ளே குளிக்கின்ற செயலைப்போன்றதாகும்.

தோற்றம் பெரிய நசையினார் அந்நசை ஆற்றா தவரை அடைந்தொழுகல்-ஆற்றுள் கயல்புரை உண்கண் கணங்குழாய்! அஃதால் உயவுநெய் யுட்குளிக்கும் ஆறு.

'குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்டது போல’ என்ற பழமொழியையும் இங்கே நினைக்க, குளிக்க நினனத்து