பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

57



கொண்டெடுத்துக் கூறல் கொடுங்கழித் தண்சேர்ப்ப! ஒன்றேற்றி வெண்படைக்கோள் ஒன்று. நண்பர்கள் திறந்த உள்ளமுடையவர்களாகப் பழகுவார் களேயல்லாமல், சொல்வேறு பொருள் வேறாகப் பேசிப் பழகு பவர்கள் அல்லர். அப்படிச் சொல் வேறு பொருள் வேறாகப் பேசுவார் நட்பினை நட்பாகக் கொள்ளுதல் வேண்டாம்; ஒதுக்கிவிடுக என்பது கருத்து. "ஒன்றேற்றி வெண் படைக்கோள் ஒன்று’ என்பது பழமொழி па 115. அமைச்சரின்றி மக்கள் நலமில்லை

தாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றினும், மனத்தாலும், வாயாலும், உடலாலும், அறிந்து அடங்கியவர்களாக விளங்கி, தம் நாட்டின் நன்மை ஒன்றையே எண்ணியவராக இருந்து ஒன்றுக்கும் வருத்தங் கொள்ளாதவராகக் காத்து வருபவரே நாட்டின் சிறந்த அமைச்சர்களாவர். அத்தகையவர் இல்லை யென்றால், அந்த நாட்டில் உள்ள உயிர்கள் எல்லாம் அந்த நாட் டைவிட்டுக்குடிபெயர்ந்து வேறு நாட்டுக்குச்சென்று அல்லற் படுவன ஆகிவிடும்.

கனதினும் வாயினும் மெய்யினும் சய்கை அனைத்தினும் ஆன்றவிந்தா ராகி--நினைத்திருந்து ஒன்றும் பரியலராய் ஒம்புவார் இல்லெனின் சென்று படுமாம் உயிர்.

அமைச்சர்கள் திரிகரண சுத்தியாக நாட்டின் நலம் ஒன்றையே கருதிச் செயற்படவேண்டும் என்பது கருத்து. 'ஓம்பு வார் இல்லெனின் சென்று படுமாம் உயிர் என்பது பழமொழி. 'சென்றுபடும் என்பது 'செத்து ஒழியும் என்றும் பொருள்படும் 15 116. ஊரைத் தழுவி நடக்கவும் -

தம்மை வந்து அடைக்கலமாகச் சேர்ந்தவர்கள் வருத்தம் அடையுமாறு ஒருபோதுமே நடக்கவேண்டாம்துறவியர்களின் ஒழுக்கநெறியினைப்பேணிநடவாமல் ஒதுங்கிநிற்பதும் கூடாது. தான் ஆராய்ந்து கண்ட பொருள் நுட்பத்தைப் பலகாலும் சிந்தித்துச் சிந்தித்து, தான் மேற்கொள்க. ஊரினர் நடக்கும் பாதையிலே, அது சரியா, இது முறையா என்றெல்லாம் கேளாமலே தானும் பின் தொடர்ந்து ஒடிக் கொண்டிருக்க. இவையே சிறந்த நெறிகளாகும். - செல்லற்க சேர்ந்தாற் புலம்பறச் செல்லாது நில்லற்க நீத்தார் நெறியொரிப்-பல்காலும்