பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

பழமொழி நானூறு மூலமும் உரையும்



மடலணி பெண்ணை மலிதிரைச் சேர்ப்ப! கடல்படா எல்லாம் படும். மன்னர் உவக்க நடந்தால், பெருஞ் செல்வமெல்லாம் அவராற் பெற்று இன்புறலாம் என்பது கருத்து. கடல் படா எல்லாம்படும் என்பது பழமொழி. . 124 125. நண்பர்க்கு உதவ வேண்டும்

பரந்த அலைகள் கரையாகிய பாரிலே வந்து மோதுகின்ற, கடற்கரைக்கு உரிய தலைவனே! தம்மால் விரும்பிப் பாதுகாக் கப்படுபவர் பண்பற்றவர்களாக இருந்தாலும், சான்றோர்கள் அதனால் தங்கள் தன்மையினின்றும் சற்றும் மாறுபாடு அடைவார்களோ? மாட்டார்கள். ஆகையால், ஊர் அறிய நம்முடன் நட்புச் செய்தவர்க்கு உணவளிப்பதும் நம் கடமை அல்லவோ?

பரியப் படுபவர் பண்பிலார் ஏனும் திரியப் பெறுபவோ சான்றோர்--விரிதிரைப் பாரெறியும் முந்நீர்த் துறைவ! கடனன்றோ ஊரறிய நட்டார்க்கு உனா. - நட்டார் குணக்கேடரானாலும், சான்றோர் அவர்க்கும் உதவுவதையே தம் கடனாகக் கொள்வார்கள் என்பது கருத்து. கட்னன்றோஊரறிய நட்டார்க்கு உனா என்பது பழமொழி. ஊரறிய நட்டார்க்கு உதவாவிடின் ஊர்ப்பழிக்கு உள்ளாகல் நேரும்என்பதாம். - 125 126. சிறந்தவர் கொடுத்தல்

புனத்து இடங்களிலே,கோட்டான் கூப்பிட்டுக்கொண்டி ருக்கும் குளிர்ந்த மலைகளையுடைய நாடனே ஒருவன் பிச்சை எடுத்து உண்ணும் ஒட்டிலே போய்க் கல்லைக் போடுபவர்கள் இந்த உலகில் எவருமே இல்லை; ஆனால் அறிவினாலே மாட்சி மையுடைய சான்றோர்களோ, தம்மிடத்தே இரந்து வருபவர்; தம் உள்ளத்திலே எண்ணியது.இது என்று அவருடைய தன்மை யையே ஆராய்ந்து பார்த்து, அவர் மனத்திலுள்ளதை அறிந்து அதற்கேற்பக் கொடுத்து உதவுபவராகவே இருப்பார்கள்.

நினைத்த இதுவென்றந் நீர்மையே நோக்கி மனத்தது அறிந்தீவார் மாண்டார்-புனத்த குடிஞை இரட்டும் குளிர்வரை நாட! கடிஞையில் கல்லிடுவார் இல்.