பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் வழக்கில் வழங்கி வருவன. அவற்றைத் தொகுத்து வகைப்படுத்தி வழங்கும் முயற்சிகள் பல இக்காலத்தே மேற்கொள்ளப்பெறுகின்றன. அக்காலத்துப்பெரும்புலவர்கள், இப்பழமொழிகளின் அடிப்படையிலே மக்களின் ஒழுக்கங்களை வகுத்துக் கூறும் பல செய்யுட்களைப் படைத்து, அவ்வொழுக்கங்களை நிலைப்படுத்தவும், அப்பழமொழிகளை நிலைப்படுத்தவும் முயன்றிருக்கின்றனர். இம் முயற்சியில், மிகவும் போற்றத்தக்கதாகத் திகழ்வது பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான பழமொழி நானூறு என்னும் அமைப்பு ஆகும்.

ஒவ்வொரு பழமொழியையும் சொல்லி, அதன் அடிப்படையில் ஒரு நீதியையும் விளக்கும் ஒவ்வொரு செய்யுளாக, மொத்தம் நானுாறு செய்யுட்களால் அமைந்துள்ளது பழமொழிநானூறு

இப்படி ஒரு நூலை உருவாக்கி,மக்களின் ஒழுகலாறுகளை முறைப்படுத்தவும், பழமொழிகளை நிலைப்படுத்தவும் முயன்ற பெருமைக்கு உரியவர், முன்றுறை அரையனார் என்னும் தமிழ்ச் சான்றோர் ஆவர். -

‘அரையனார்’ என்னும் சொல்லால் இவரை அரசகுடியினர் என்று கூறலாம். முன்றுறை என்பது கடல் மற்று ஆற்றின் கரைகளில், மக்கள் நீராடவும் மற்றும் படகு, வள்ளம் போன்றவற்றில் சென்றுவரவும் வசதியாக அமைந்த துறைகளையே முன்றுறை என்பார்கள். கொற்கை முன்றுறை, கழார் முன்றுறை, காவிரி முன்றுறை, கழார் முன்றுறை, காவிரி முன்றுறை, வையைக் கரையின் திருமருதமுன்றுறை என்று பல முன்றுறைகளைப் பற்றி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவற்றுள் ஒன்றைச் சேர்ந்த பகுதியில் பிறந்தவர் இவராகலாம்.

இந்நூலின் அமைப்பிலே பயின்றுவரும் சொற்களையும் கருத்துக்களையும் பழமொழிகளையும் கருத்திற் கொண்டால், இவரைத் தென்பாண்டிநாட்டின் சீர்மிகு பழம்புலவருள் ஒருவர். எனலாம். சமண சமயக் கோட்பாடுகளில் அழுத்தமான பற்றினர் என்றும் அறியலாம். .

முதலிரண்டு அடிகளில் தாம் சொல்லக் கருதுகின்ற் உண்மையை அமைத்தும், செய்யுளின் இறுதியில் அதற்கேற்றதும் அவ்வுண்மையை வலியுறுத்துவதுமான பழமொழியை அமைத்தும், இந்நூற் செய்யுட்களை இவர் அமைத்துள்ளார். ஒருசில செய்யுட்களில் மட்டுமே இரண்டு பழமொழிகளைச் சேர்த்துள்ளார். -