பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

பழமொழி நானூறு மூலமும் உரையும்



வந்துசேர்ந்துவிடும்.அதுபோலவே,பெறுவதற்கு அருமையுடை யதான பொருளை உடையவர்களும், தங்களிடம் காரியம் இருக்கின்றவர்களைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை; தாமாகவே பலர் அவரிடம் வந்துசேர்ந்து விடுவார்கள்.

அருமையுடைய பொருளுடையார் தங்கண்

கருமம் உடையார் நாடார் - எருமைமேல் நாரை துயில்வதியும் ஊர! குளந்தொட்டுத்

தேரை வழிச்சென்றார் இல். -

"பணக்காரர். பின் பத்துப்பேர் என்ற பழமொழியையும் இதனுடன் கருதுக: 'குளந்தொட்டுத் தேரை வழிச் சென்றார் இல்’ என்பது பழமொழி. - 162 163. கீழோர் தாமே அழிவர் -

முத்துமாலைகள் விளங்குகின்ற மார்பினை உடையவனே குற்றமற நல்லொழுக்கத்தைப் பேணி நடந்துவராத கீழ்மக்கள் செய்த பிழைகளை, மேன்மக்கள், தம்முடைய உள்ளத்திலே பெரிதாகக்கொண்டு, அவருக்கு எதிராக எதனையும் செய்ய முயலுதல் வேண்டாம். அப்படி முயல்வது, சிறிய நரியை அழிப்பது கருதி நல்ல 'நாராயணம் என்னும் அம்பினைத் தொடுக்கநினைப்பது போன்றதாகும். - -

காழார மார்பரீ கசடறக் கைகாவாக் கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர் உள்ளத்துக் கொண்டுநேர்ந்து ஊக்கல், குறுநரிக்கு நல்லநாராயங்கொளல். - 'கீழோரை அழிக்கச் சான்றோர் முயலவேண்டாம்; அவர் தாமே அழிந்து விடுவர் என்பது கருத்து. நாராயம் - நாராயண அத்திரம். 'குறுநரிக்கு நல்ல நாராயம் கொளல் என்பது பழமொழி. - 163

164, வேலையை விட்டு நீக்குதல்

ஒரு வேலையைச் செய்வதற்குத் தகுதி உடையவர்'என்று ஒருவரை நியமித்துவிட்டு, அவர் பேரில் சந்தேகித்து, அவரிடம் எவ்விதமான விளக்கமும் கேளாமலேயே அவரை அந்தப் பொறுப்பினின்றும் நீக்கி விடுதல், மிகவும் கீழான பண்பிற்குப் பொருந்தியதொரு செயலாகும். அது சிறு பிள்ளைகள் சோலை நட்டு விளையாடுதலைப் போன்றது எனலாம்.