பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

81



உறுமக்களாக ஒருவரை நாட்டிப் . பெறுமாற்றம் இன்றிப் பெயர்த்தே யொழிதல் சிறுமைக்கு அமைந்ததோர் செய்கை, அதுவே, | குறுமக்கள் காவு நடல். -

குழந்தைகள் சோலை நடுவதாகச் சொல்லிச்செடிகளைப் பெயர்த்துப் பெயர்த்து நட்டு விளையாடுவார்கள். எதுவும் ஓரிடத்தில்ே நிலைத்து இருக்கவிடுவது அவர்கள் இயல்பன்று. அதுபோன்ற அறியாமைச்செயல் என்பது கருத்து.'குறுமக்கள் காவு நடல் என்பது பழமொழி. 164 165. போகூழானால் முயற்சியும் பயன் தராது -

பூக்களிடையே புகுந்து வண்டுகள் மொய்த்துக் கொண்டு ஆரவாரிக்கும் ஊரனே! எங்கும் வெற்றி கொண்டவனாக வந்து கொண்டிருக்கும் ஒருபேரரசன் தன்நாட்டினுள் புகுந்தவிடத்து, அதனை ஆளும் குறுநில மன்னன் பணிந்து போவ தல்லது எதிர்த்துச் செய்யக்கூடியது யாதுமில்லை. அது போலவே, பொருளை நிறைவுசெய்யும்முயற்சியும்துன்பமே துணையாகத் தெய்வமானது முடிவுசெய்த காலத்தே. எந்த விதமான

பயனையும் செய்வதில்லை.

எவ்வம் துணையாய்ப் பொருள்முடிக்கும் தாளாண்மை தெய்வம் முடிப்புழி என்செய்யும்?--மொய்கொண்டு. பூப்புக்கு வண்டார்க்கும் ஊர! குறும்பியங்கும் கோப்புக் குழிச்செய்வது இல்.

நல்ல ஊழ்வினை இல்லாது போனால், செல்வம் முயற்சி யாலும் வந்து வாயாது என்பது கருத்து. 'குறும்பு இயங்கும், கோபுக்குழிச் செய்வது இல்’ என்பது பழமொழி. 165 166. கொடியவர் மனம் மாறுவதில்லை - -

நாள்தோறும், கையின்கண் இருப்பதாகவே வளர்ந்து வந்தாலும், காடைக்கு மனமெல்லாம் வயற்புறங்களிலேயே

ஈடுபட்டிருக்கும், அதுபோலவே, காட்டின்கண் வாழும்

வாழ்க்கை முறைமையினை உடையவர்களா கொடுந் தொழில் செய்யும் மக்களை, நாட்டின்கண்ணே வாழுமாறு வேண்டியன செய்து உதவினாலும், அவர்கள் நல்ல முறையிலே நடக்க மாட்டார்கள். .

காடுறை வாழ்க்கைக் கருவினை மாக்களை நாடுறைய நல்கினும் நன்கொழுகார்-நாடொறும்

t