பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியிழுப்பின் இல்லை அரண்

புலியூர்க் கேசிகன் - 83

உயர்ந்தார் - உயர்குடியினரும், உயர் நிலையினரும் ஆம். உயர்ந்தோர் தம்பால் எவ்விதச் சிறு குற்றமும் ஏற்படாதவாறு விழிப்புடன் நடத்தல் வேண்டுமென்பது கருத்து.‘குன்றின்மேல் இட்ட விளக்கு’ என்பது பழமொழி. - 168 169. நல்ல குடியினர் எவர்? -

தம்மை அண்டிவந்தவர்களின் துன்பங்கள் முழுவது நீங்கு மாறு தாராளமாகவே உதவிகளைச் செய்தும்,எப்போதும் குற்ற மற்றவைகளைச்செய்யாதவர்களாக விளங்குபவர்கள் மிகவும் வளமுடையர்வகளாகவே இருந்தாலுங்கூடச் சிறப்புடையவர் ஆக மாட்டார்கள். குற்றம் அறுமாறு மாட்சி உடையதாக விளங்கும் மனம் உடையவர்கள் ஆவதே சிறப்பாகும். அப்படி

ஆகாத கூளங்கள் ஒருபோதும் நல்ல குடியினராக ஆகவே

மாட்டார்கள். -

பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து ஆசறு செய்யாராய் ஆற்றப் பெருகினும் மாசற மாண்ட மனமுடையர் ஆகாத கூதறைகள் ஆகார் )مکازت - தடயுடலாக எவ்வளவு தருமங்கள் செய்தாலும், எவ்வளவு செல்வம் உடையவரானாலும், குற்றமில்லாத நல்லொழுக்கம் இல்லாதவர்களானால், அவர்கள் நல்ல குடும்பத்தினர் ஆக மாட்டார்கள் என்பது கருத்து. 'கூதறைகள் ஆகார் குடி' என் பது பழமொழி-கூதறை-கூளம். - 169 170. செயலை வெற்றியுடன் முடித்தல்

பருத்த தோள்களை உடையவனான செம்பியனது சீற்றம்,

பரந்த வானத்தின்கண்ணே அசைந்து சென்று கொண்டிருந்த அசுரர்களின் கோட்டையையும் அழித்தது. அதனால், எந்தக்

காரி யத்தையும் அது வெற்றியுடன் முடியும் வழியினை ஆராய்ந்து அவ்வாறு முயன்று முடிக்கவேண்டும்.கூர்மையான அம்பு அடிபொருந்த இழுத்துச்செலுத்தப்படும்போது, அதனை வந்து பாயாது தடுப்பதற்குரிய பாதுகாவல் எதுவுமே இல்லையாகும். - . . -

வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில் தூங்கும் எயிலும் தொலைத்தலால்-ஆங்கு முடியும் திறத்தால் முயல்க, தாம், கூரம்பு.