பக்கம்:பழைய கணக்கு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

கலைஞருடன் பழகிய போதும் சரி, எம். ஜி. ஆருடன் பழகிய போதும் சரி, எனக்கென்று இவர்களை நான் எதுவுமே கேட்டதில்லை.

காமராஜராவது ஒரு நாள் பேச்சு வாக்கில், “வீடு கீடு ஏதாவது சொந்தமாக் கட்டிருக்கீங்களா?” என்று கேட்டதுண்டு. கலைஞர் அது கூடக் கேட்டதில்லை.

கலைஞர் வெளியூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பார். “நானும் உங்களோடு வருகிறேன்?” என்பேன். “வரட்டுமா?” என்று கூடக் கேட்க மாட்டேன். அவரும், “வாங்களேன்” என்பார். அந்த “வாங்களேன்” என்ற சொல்லில் அன்பு, ஆனந்தம், ஆர்வம் எல்லாம் கலந்திருக்கும். அப்புறம் பயணம் முழுதும் நகைச்சுவை கலந்த பேச்சுதான். காமராஜ், ராஜாஜி, அண்ணா, பெரியார், வாசன், மைசூர் மகாராஜா, ஷேக் அப்துல்லா, ம. பொ. சி., எம். ஜி. ஆர். சங்கராச்சாரியார் எல்லாரைப் பற்றியும் பேசியிருக்கிறார். யாரைப் பற்றியும் அவதுாறாக, பண்பாடற்ற முறையில் தரக்குறைவாக எப்போதும் பேசியதில்லை. எந்தெந்த சந்தர்ப்பங்களில் யார் யார் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை மட்டும் வேடிக்கையாகவும் சில சமயம் சீரியஸாகவும் தமக்கே உரிய பாணியில் சொல்லுவார். அதையெல்லாம் நான் ஓர் எழுத்தாளன் என்கிற முறையில் கவனமாகக் கேட்டுக் கொள்வேன்.

நான் அவரிடம் பதவியோ, உதவியோ எப்போதும் கேட்டதில்லை. நான் அவரிடம் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது நான் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் போடுவதற்குக் கதை, கட்டுரை!

1977 பொதுத் தேர்தலின் போது என்னை ஒரு நாள் டெலிபோனில் கூப்பிட்டு, “மாம்பலம் தொகுதியில் தி மு. க. சார்பில் நிற்கிறீர்களா?” என்று கேட்டார். நான் நேற்றுதானே ஜனதா கட்சியில் சேர்ந்திருக்கிறேன். உங்களுக்குத் தெரியாதா?” என்று இழுத்தாற்போல் பதில் சொன்னேன்.

உடனே எனக்கு வருத்தம் தெரிவித்து, “அப்படியா சங்கதி? எனக்குத் தெரியாதே! தங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தி விட்டேனே? மன்னிக்கவும்” என்று டெலிபோனில் கூறியதுடன் மிக மிகப் பெருந்தன்மையோடு ஒரு கடிதமும் எழுதி அனுப்பியிருந்தார். முதல் முறை அண்ணா நகர் தொகுதியில் அவர் போட்டியிட முடிவு செய்த போது அவர் என்னிடம் எதுவுமே அது பற்றிப் பேசவில்லை. ஆயினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/116&oldid=1146104" இலிருந்து மீள்விக்கப்பட்டது