பக்கம்:பழைய கணக்கு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் முதல் வகுப்பு டிக்கட் வாங்கி அவரைப் படம் பார்க்க அழைத்துச் சென்றதை மிகப் பெருமையாக எண்ணிக் கொண்டார். சினிமாவில் முதல் வகுப்பு என்பது கடைசியாகத்தான் இருக்கும் என்பது அப்பாவி கிராம வாசியாகிய அவருக்கு விளங்கவில்லை.

வீட்டுக்குத் திரும்பியதும் ரொம்பப் பெருமையோடு என் தாயாரிடம் “பையன் என்னை முதல் வரிசையில் எல்லோருக்கும் முன்னால் கொண்டு போய் உட்கார வைத்து விட்டான்” என்று சொல்லிக் கொண்டார்.

அதுதான் அதம பட்சம். கடைசி வகுப்பு என்பதை நான் அவருக்குக் கடைசி வரை சொல்லவே இல்லை. மாடி வீட்டில் வாழ்ந்த மாமாவிடம் பெரிய பெரிய மிட்டாய்கள் வாங்கித் தந்த பணக்கார மாமாவிடம் ‘கடைசி வகுப்பு டிக்கட் வாங்கி சினிமா காட்டினேன்’ என்ற ‘குட்டை’ உடைத்து அவர் மகிழ்ச்சியைக் கெடுக்க விரும்பவில்லை நான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/143&oldid=1146134" இலிருந்து மீள்விக்கப்பட்டது