பக்கம்:பழைய கணக்கு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மூன்று கால கட்டங்கள்

ங்கள் கிராமத்தில் வருடா வருடம் மாரியம்மன் திருவிழா மிகச் சிறப்பாக நடத்துவார்கள். கரகம் ஜோடித்து உச்சியில் எலுமிச்சம்பழம் வைத்து அம்மனைத் தலைமேல் தூக்கிக் கொண்டு வீதிவலம் போவார்கள். தாரை, தப்பட்டை, கொம்பு வாத்தியம், மேள வாத்தியம் எல்லாமாகச் சேர்ந்து போடுகிற சத்தத்தில் ஊரே அமர்க்களப்படும்.

அம்மனுக்குப் படைக்க எங்கள் விட்டில் கூழ் காய்ச்சுவார்கள். உங்களுக்குக் கிராம வாழ்க்கை பரிச்சயமென்றால், கிணறுகளில் ஏற்றம் போட்டுத் தண்ணீர் இறைக்கும் ‘சால்’ என்ற பெரிய தொட்டியும் பரிச்சயமாகி இருக்கும். அந்தத் தொட்டியைப் பளபளவென்று தேய்த்துச் சுத்தமாக்குவார்கள். கோலம் போட்டு வைத்துள்ள வீட்டு வாசலில் அதைக் கொண்டு வைத்து காய்ச்சிய கூழைக் அந்தச் சால் நிறைய ஊற்றி நிரப்பிப் பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். அப்புறம் அந்தக் கூழ் முழுதும் ஏழைகளுக்கு விநியோகம் ஆகிவிடும்.

கூழ் சாப்பிடுவது என்பதை மேட்டுக் குடிமக்கள் தங்கள் அந்தஸ்துக்கு ஒவ்வாததாய்க் கருதினர். உழவர்களும், உழைப்பாளிகளும், ஏழை எளியவர்களும் சாப்பிடுவதற்காகவே ஏற்பட்ட தானியம் கேழ்வரகு என்பது அவர்கள் எண்ணம். அக்கிரகாரத்துக்குள் எல்லோருமே அரிசிச் சோறுதான் சாப்பிடுவார்கள். அங்கே கூழ் தலை காட்டாது. கூழ் சாப்பிட்டால், 'பாவம், கூழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/144&oldid=1146135" இலிருந்து மீள்விக்கப்பட்டது