பக்கம்:பழைய கணக்கு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கல்கி ஏன் ஜிப்பாவுக்கு மாறினார்?

‘கத்தரி விகடன்’ என்ற பெயரில் நான் ஒரு பத்திரிகை தொடங்கினேன். வருடம் 1937. அப்போது ஆனந்த விகடன் பொறுப்பாசிரியராக இருந்த கல்கி அவர்கள் என்னைக் கூப்பிட்டனுப்பி, பத்திரிகையாவது, மண்ணாவது. அதெல்லாம் நடத்த முடியாது. ஆனந்த விகடனில் உனக்கு உதவி ஆசிரியர் வேலை தருகிறேன். ஒப்புக் கொள்கிறாயா?” என்று கேட்டார்.

“சரி” என்றேன்.

“நீ இதுவரை கத்தரி விகடனுக்காக எவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறாய்?” என்று கேட்டார் கல்கி.

“நூற்று அறுபது ரூபாய்” என்றேன்.

“அதை நீ வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறி விகடன் ஆபீஸிலிருந்து அந்தப் பணத்தைக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தார். மொத்தமாக அவ்வளவு பெரிய தொகையை நான் அதுவரை பார்த்ததில்லை. எனவே பணம் வந்த குஷியில் அன்றே ஒரு ஸில்க் ஜிப்பா தைத்துப் போட்டுக் கொண்டேன். மறுநாள் அதை அணிந்து கொண்டு அலுவலகம் போனபோது கல்கி அவர்கள் என்னை ஏற இறங்கப் பார்த்தார். அவருக்குப் புரிந்து விட்டது!

“நேற்று கொடுத்த பணம் ஸில்க் ஜிப்பாவாக மாறிவிட்டதா? கையில் கொஞ்சம் பணம் கிடைத்தால் அதைக் “கன்னா பின்னா’ என்று செலவு செய்து விடுவதா? இதோ பார், இந்த ஸில்க் ஜிப்பாவை உடனே கழற்றி எறி. அசிங்கம். இனிமேல் நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/22&oldid=1145681" இலிருந்து மீள்விக்கப்பட்டது