பக்கம்:பழைய கணக்கு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மணியனுடன் ஒரு பயணம்

னந்த விகடனில் ‘தெற்கு வளர்கிறது’ கட்டுரைத் தொடர் எழுதுவதற்காக நானும் திரு மணியனும் ஒரு முறை நீலகிரி மாவட்டத்துக்குப் போயிருந்தோம். ஊட்டியில் ஒரு ஹோட்டலில் தங்கினோம். அச்சமயம் அங்கே குதிரைப் பந்தய ஸீஸன். எனக்கு ரேஸ் பழக்கம் கிடையாது. உழைத்துச் சம்பாதிப்பதை ஒரு வாழ்க்கை நெறியாக மதிப்பவன் நான்.

ஆனாலும், ஒரு எழுத்தாளனுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். பிரசவம் பற்றிக் கூட அறிந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஆகவே, ரேஸ் மைதானத்துக்குப் போய் அங்கே என்ன நடக்கிறது என்பதை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ள விரும்பினேன்.

“மணியன்! நான் ரேஸுக்குப் போகப் போகிறேன். நீ வருகிறாயா?” என்று கேட்டேன். பயணச் செலவுக்கென்று ஆபீஸில் பெற்று வந்த ஆயிரம் ரூபாயை என் கைப் பையில் வைத்திருந்தேன். நான் அவ்வளவு பணத்தையும் ரேஸில் தொலைத்து விடுவேனே என்ற அச்சம் பிடித்துக் கொண்டது மணியனுக்கு! “ஐயையோ அங்கே போனால் பணம் போய்விடும். பணப்பையை எடுத்துப் போகாதீர்கள். நான் அதைத் தர மாட்டேன்” என்று சொல்லி அந்தப் பையை என்னிடமிருந்து பலாத்காரமாக வாங்கி வைத்துக் கொண்டு விட்டார். நான் மெளனமாய்ச் சிரித்துக் கொண்டேன்!

“நான் என்ன சின்னக் குழந்தையா? ரேஸுக்கு வரும் சில கேரக்டர்களை ஸ்டடி பண்ணத்தான் அங்கு போக விரும்புகிறேனே தவிர ரேஸில் பணம் கட்ட அல்ல” என்று நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/40&oldid=1145982" இலிருந்து மீள்விக்கப்பட்டது