பக்கம்:பழைய கணக்கு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆதித்தனாருக்குப் பெரிய மனசு

கஸ்ட் போராட்டத்தில் சிறைக்குப் போய் வெளியே வந்ததும் எனக்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை. எப்படி வாழப் போகிறோம் என்ற பெரிய கேள்விக் குறியோடு நாட்களைத் தள்ள வேண்டிய நிலை. எப்போதும் போலவே எனது நண்பர் தி. ஜ. ரங்கநாதன் அவர்கள்தான் எனக்குப் புகலிடம் அளித்தார்.

வை. கோவிந்தன் நடத்தி வந்த ‘சக்தி’ பத்திரிகையில் தி. ஜ ர. அப்போது ஆசிரியராக இருந்தார். அலுவலகம் பவழக்காரத் தெருவில் இருந்தது. காலையில் அங்கே போய் விடுவேன். தி ஜ. ர. பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பேன். அவரோடு கூடவே சாப்பிடுவேன்.

ஒரு நாள் தி. ஜ. ர. சொன்னர்:

“இப்படியே போய்க் கொண்டிருந்தால் எப்படி? நீர் எங்கேயாவது வேலையில் சேர வேண்டும். ஆதித்தன் என்றொரு பெரிய பணக்காரர் சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறார், அவர் பேப்பர் ஆரம்பிக்கப் போவதாய்க் கேள்விப்பட்டேன். அவரைப் போய்ப் பார்க்கலாம் வாரும்.”

ஆதித்தன் அவர்களைத் தேடிப் போனோம். தம்பு செட்டித் தெருவில் வாடகைக்கு ஓர் அறை பிடித்து அங்கே ஒரு மேஜையும் நாற்காலியும் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார் அவர். தி. ஜ. ர. என்ன ஆதித்தனாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ஆஜானுபாகுவான உடல்வாகு. கோட் போட்டிருந்தார். சிரித்த முகம். இனிமையான நயமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/84&oldid=1146028" இலிருந்து மீள்விக்கப்பட்டது