பக்கம்:பவள மல்லிகை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f

பஞ்ச கல்யாணிக் குதிரை 95

னும் வேகமாக ஒட்டினன். "சே இவ்வளவுதான வேகம்? இதற்கா நான் பயப்படப்போகிறேன் ? உங்கள் குதிரை யின் வேகம் உங்களுக்கே தெரியாது போலிருக்கிறது!" என்று அரசகுமாரி சொன் ள்ை. தன் குதிரையைக் குறை கூறுவதை அவளுல் பொறுக்க முடியவில்லை. வாரைச் சற்றுச் சுண்டி விட்டான். குதிரை காடும் மேடும் தலை தெறிக்க ஒடியது. “ஹாம்! இன்னும் வேகம்’ என்று ராட்சசியைப் போல அவள் கத்தினுள். அசுவபதி முடுக்க முடுக்க,"இன்னும் வேகம்' என்று கூச்சலிட்டாள், ஆவே சம் வந்தவளைப்போல்,

அதுவரை போகாத வேகத்தில் குதிரை பறந்தது. அசுவபதி அதை விரட்டினன். எந்தப் பெண்ணும் அஞ்சும் நிலையில் அது பாய்ந்தது. ஆல்ை அவள் அஞ்சவில்லை. பெண்ண்? பேயா...குதிரை இடையே ஒரு புதரைத் தாவியது. மேலே எழும்பத் தாவின தாவலில் அவள் தன் கைப்பிடிப்பை விட்டு விட்டாள். அப்படியே கீழே விழுந்து விட்டாள்; அடர்ந்த புல் தரையில் மல்லாக்க விழுந்து கிடந்தாள். அசுவபதி திடீரென்று குதிரையை நிறுத்தினன். அதற்குள் அது நெடுந்துாரம் போய் விட் டது. திருப்பிக் கொண்டு வந்தான். தன் மனைவி வீழ்ந் திருந்த இடத்துக்கு வந்து அவளைப் பார்த்தான். நெருங்கி அடர்ந்த புல் தரை ஆகையால் அவளுக்குக் காயம் ஒன் றும் இல்லை. ஆனல் அதிர்ச்சியால் மூர்ச்சை போட்டு விழுக் திருந்தாள். உடனே அருகில் இருந்த ஒடையிலிருந்து கண் னிர் கொண்டு வந்து அவள் முகத்தில் தெளித்தான்; துக்கி மடியில் வைத்துக் கொண்டு ஆசுவாசப்படுத்தினுன். "என்ன பைத்தியக்காரத்தனம் செய்தேன்! இவள். சொன் ள்ை என்பதற்காக அவ்வளவு வேகமாக விட்டிருக்கக் கூடாது என்று அவன் மனத்துக்குள் பதறிஞன். எவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/101&oldid=592189" இலிருந்து மீள்விக்கப்பட்டது