பக்கம்:பவள மல்லிகை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பவள மல்லிகை

வளவு அருமையாகக் கிடைத்த அழகி இவள் இவள் பிழைப்பாளா? என்று ஏங்கினன்.

மெல்லிய தென்றல் வீசியது. அவள் மெல்லக் கண் விழித்தாள். கண்ணிரைக் கொடுத்தான். இரண்டு மிடறு குடித்து விட்டு மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். சுற்று முற்றும் பார்த்தாள்.

போதும் ஸ்வாமி, உம்முடைய குதிரைச் சவாரி. என் உயிருக்கே உலை வைக்கப் பார்த்துவிட்டதே உங்கள் குதிரை!” என்று ஆயாசத்தோடு அவள் பேசிள்ை.

"அது என்ன செய்யும்? நான்தானே ஒட்டினேன்? அப்படி ஒட்டுவதற்கும் தோனே காணம்'

‘வெகு என்ரும் இருக்கிறது. கழுதை துள்ளுவதைப் போலத் துள்ளிக் குதித்தால், அதன் மேலே மனிதன் உட் கார முடியுமோ?' என்ற மறுபடியும் அவள் குதிரை யைக் குறை கூறினுள். -

“சரி, நாம் இப்போது அரண்மனைக்குப் போகலாம்' என்று சொல்லி அசுவபதி அவளை அழைத்துக் கொண்டு அரண்மனை வந்து சேர்ந்தான்.

இரண்டு நாட்கள் சென்றன. மூன்ருவது நாள் அசுவபதியிடம் அவன் மனைவி, 'இந்தக் குதிரை பெரிதா, நான் பெரிதா?’ என்று கேட்டாள்.

' என்ன அசட்டுக் கேள்வி' என்ருன் ராஜ குமாான். - -

இப்போது அப்படித்தான் சொல்லுவீர்கள். குதிரை கீழே தள்ளிவிட்டதைப் பார்த்தும் உங்களுக்குப் புத்தி வரவில்லை. அது குழிபறித்தால்தான் நான் சொல் வது தெரியவரும்.”

' என்ன செய்யச் சொல்கிருய் ?"

"இதைத் கொலைத்துத் தலை முழுகச் சொல்கிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/102&oldid=592190" இலிருந்து மீள்விக்கப்பட்டது