பக்கம்:பவள மல்லிகை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i02 - வவள மல்லிகை

'என்ன இப்படி ஒரே காபாப் படுகிறீர்களே, உல சுத்தில் கார் வைத்திருக்கிறவர்களெல்லாம் தாங்களே ஒட்டுவதென்பது வழக்கமாக வந்து விட்டது இப்போத, நீங்கள் கர்நாடகமாகப் பேசுகிறீர்களே ! உங்கள் பேச்சை யாராவது கேட்டால் கிரிப்பார்கள்.”

சங்கரலிங்க செட்டியார் கர்நாடகப் பேர்வழி என் பது வாஸ்தவத்தான். ஆனலும் அவர் பயப்பட்டதற்குக் காரணமும் இல்லாமற் போகவில்லை. டிரைவர் சொக்க லிங்கமே சொல்லியிருக்கிருன், “சின்ன எசமான் கையிலே காரு காத்தால்ல போவுது ' என்று. அவன் ஆச்சரியப் பட்டுச் சொன்னன். செட்டியாருக்கோ அடிவயிற்றில் பெேசன்றது. ராமமூர்த்தி காரைக் கொஞ்சம் உற்சாகத் தோடு ஒட்டுவான். தனக்குப் பின்னல் யாராவது குழல் ஊதினுல் போதும் ;.லேசிலே அவனுக்கு இடம் கொடுக்க மாட்டான். இந்த வெறி எப்படியோ குதிரை வண்டிக் காரன் முதல் கார் ஒட்டுகிறவர் வரையில் எல்லோருக்கும் பொதுவாகப் போய்விட்டது. -

அன்று காலை சரியாக ஆறு மணி இருக்கும். அவசர அவசரமாக யாரையோ பார்ப்பதற்காகக் காரிலே புறப் பட்டான் ராமமூர்த்தி, ஐந்து மைல் போகவேண்டும். பத்து கிமிஷத்தில் போய்விடலாம், ரோட்டில் தடையில் லாமல் இருந்தால், அவன் வேகமாகப் போனன். இரண்டு மைல் போயிருப்ப்ான். முன்னல் ஒரு குதிரை வண்டி போய்க்கொண்டிருந்தது. எதிரில் இருந்து ஒரு மொட்டை வண்டி மூங்கிற் கழிகளைப் பாரமாக ஏற்றிக்கொண்டு வந் தது. குதிரை வண்டிக்கு அருகில் கார் வரும்போது வலப் பக்கத்தில் மூங்கில் வண்டி வந்து விட்டது. வண்டிக்காரன் நேராக ஒட்டாமல் வண்டியை ஒடித்தால் மூங்கில் வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/108&oldid=592204" இலிருந்து மீள்விக்கப்பட்டது