பக்கம்:பவள மல்லிகை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் தெய்வம் ? Yūš

யைத் தடுத்துவிடும். ஆகவே அவன் கண்ணே மூடிக் கொண்டு நேரே ஒட்டினன்.

எப்படி நேர்ந்ததென்று தெரியாது ; முன்னே போன குதிரை வண்டியின்மேல் கார் மோதிவிட்டது. குதிரை முன்னலே தள்ளப்பட்டுக் கீழே விழுந்தது. வண்டிக் குள்ளே இருந்தவர்கள் கீழே விழுந்தார்கள்.

ராமமூர்த்தி பிரேக் போட்டான். காருக்கு அவ் வளவு சேதம் இல்லை. ஆல்ை இதுவரைக்கும் இத்தகைய விபத்து நேர்ந்ததே இல்லை. அதுவும் அன்று காலை நேரத் தில் யாரோ ஒரு காலேஜ் மாணவிக்கு உபகாரம் செய் வதற்காக அவன் போய்க்கொண்டிருந்தான். அந்தச் சம யத்தில் அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. வேர்த்து வெலவெலத்துப் போயிற்று.

மூங்கில் வண்டிக்காரனும் அவனுடன் இருந்த கூட் டாளியும் இறங்கி வந்துவிட்டார்கள். குதிரை வண்டிக் காரனும் வந்துவிட்டான். -

வண்டியிலிருந்து விழுந்தவர்கள் இாண்டு மூன்று பேர். யாரோ ஒரு பெண் ; இருபத்தைந்து வயசு மனிதன் ஒருவன்; மற்ருெரு கிழவன். அவர்களுக்குப் பலமான அடி இல்லாவிட்டாலும் கொஞ்சம் சிராய்த்து விட்டது.

ராமமூர்த்தி கூட்டத்தைக் கண்டதும் அதிகமாகப் பயத்துவிட்டான்; எப்படித் கப்புவது என்று தோன்ற வில்லை. சில நிமிஷ நேரம் அவன் நாக வேதனையை மானசிகமாக அநுபவித்தான். மெதுவாகக் குதிசை வண் டிக்காரனேக் கூப்பிட்டான். பத்து ரூபாய் நோட்டை அவன் கையில் அழுத்தினன். 'அவர்கள் எங்கே போக வேண்டும்? கேட்டுச் சொல். இந்தக் காரிலேயே கொண்டு போய் விட்டுவிடுகிறேன்” என்ருன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/109&oldid=592205" இலிருந்து மீள்விக்கப்பட்டது