பக்கம்:பவள மல்லிகை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iði பவள மல்லிகை

ரூபாய் கையில் வந்தவுடன் வண்டிக்கான் கோப மெல்லாம் எங்கேயோ ஒடி ஒளிந்து விட்டது. 'அது கிடக்குது ஐயா! நீங்க வேணுமுன்ன வந்து மோகினிங்க? அந்த மூங்கி வண்டி வாாட்டி நீங்க ராச பாட்டையாப் போயிருப்பிங்க' என்று சொல்லி, நீங்க போங்க. அவங் களை நான் பார்த்துக்கிறேன்' என்று தைரியம் கூறினன்.

ராமமூர்த்தி மறு பேச்சுப் பேசாமல், தலை தப்பியது தம்பிரான் புண்ணிய மென்று வீட்டுக்குக் காரைத் திருப்பி விட்டான். வரும்போது அவனுக்கு எவ்வளவோ யோசனை. விழுந்தவர்கள் என் நம்மிடம் வந்து ஒன்றும் பேசவில்லை? அவர்கள் யாராவது போலீஸ்காரனுக்குச் சொல்லிவிட்டால் என்ன செய்வது?’ என்றெல்லாம் அவன் மனசு உதைத்துக் கொண்டது. அன்று சாத்திரி முழுவதும் அவனுக்குத் தாக்கமே இல்லை.

பிறகு நாலு நாள் காரின் முன் வtட்டில்கூட அவன் உட்காருவதில்லை. ஏதாவது கேஸ், கீஸ் வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம். தகப்பனுருடைய வாக் குப் பலித்துவிடுமோ என்ற எண்ணம் வேறு. பிறகு அவர் முன் தலைகாட்டுவது எப்படி?

- ஒரு வாரம் ஆயிற்று. ஒரு நாள் சாயங்காலம் வீட்டு வாசல் பக்கத்தில் உள்ள மேடைமேல் அமர்ந்து கொண் டிருந்தான் ராமமூர்த்தி. அப்போது யாரோ இரண்டு பேர் காம்பெளண்டுக்குள் நுழைந்து வந்தர்ர்கள். ஆண் பிள்ளை ஒருவன்; பெண் பிள்ளை ஒருத்தி, அந்த ஆள் கையில் ஏதோ சிறிய கூடை வைத்திருந்தான். அந்தப் பெண்ணைப் பார்த்தால் எங்கேயோ கண்டமாதிரி இருக் தது. கினைத்துப் பார்த்தான் ராமமூர்த்தி. ஆம், குதிரை வண்டியிலிருந்து விழுந்த பெண்தான்! அவனுக்கு மூச்சே ஒரு கணம் கின்று விட்டது. o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/110&oldid=592206" இலிருந்து மீள்விக்கப்பட்டது