பக்கம்:பவள மல்லிகை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோடி மாப்பாச்சி 109

சல்லடம் போட்டிருக்கிறது. பழைய காலத்தில் இந்த மரப்பாச்சிகளுக்குத்தான் மதிப்பு.”

ஒரு தம்ளரில் காபியைச் சங்கரன் கையில் கொடுத் தாள். அவன் அதைக் குடித்தான். தன் கையில் இருந்த டபாவிலிருந்து மிச்சக் காபியைக் கொஞ்சம் கொஞ்ச மாகத் தம்ளரில் விட்டாள். -

'என்ன யோசிக்கிறீர்கள்? மரப்பாச்சி விற்கிற கடை ஞாபகத்துக்கு வரவில்லையா?”

சங்கரன் நெற்றியைச் சுருக்கிக்கொண்டான். நீ சொன்னயே, அந்த மரப்பாச்சியில் ஒன்று ஆண்; மற் ருென்று பெண்; இல்லையா?” என்று அவன் கேட்டான். கோமதி சிரித்தாள். "அதைத்தானே நான் சொல் கிறேன்? நீங்கள் வேறு எங்கேயோ ஞாபகமாக இருக் கிறீர்கள் போலிருக்கிறது. இப்போது சாப்பிடுவது காபி என்ருவது தெரிகிறதா, இல்லையா?” என்ருள்.

சங்கான் காபியின் கடைசிப் பகுதியைக் குடித்து விட்டுத் தம்ளரை அவள் கையிலே கொடுத்தான்; அதோடு புன்னகை பூத்தபடியே அவள் கன்னத்தை லேசாகத் தட்டிவிட்டு, "அடே! நான் காபியா குடித்தேன்? அது தெரியவில்லையே! அமிர்தத்தையல்லவா ரம்பை கொடுத் துச் சாப்பிடுவதாக கினைத்துக் கொண்டிருந்தேன்?" என்ருன். - - * .

போங்கள்; உங்களுக்கு எப்போதும் வேடிக்கை தான்' என்று கொஞ்சலாகச் சிணுங்கிள்ை கோமதி.

“அந்தப் பொம்மைகளையெல்லாம் எங்கே வைத்திருக் கிருய் எல்லாவற்றையும் பார்த்துவிட்டாயா?" என்று கேட்டான் சங்கரன். - - . . . o

"அடேயப்பா ஒரு நாளில் முடிகிற காரியமா அது? ஒரே குப்பை, தாசி, அழுக்கு மண்டிக் கிடக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/115&oldid=592218" இலிருந்து மீள்விக்கப்பட்டது