பக்கம்:பவள மல்லிகை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 - பவள மல்லிகை

சோழி வகையாவே ஒரு கூடை இருக்கும். உங்கள் அப்பா எத்தனை தரம் ராமேசுவரம் போளுர் '

"என்னைப் பெறுவதற்கு முன்பு ஒரு தடவை போயிருக்கலாம்.' -

'இல்லை, இல்லை. மாசத்துக்கு ஒரு தடவை போய், ஒவ்வொரு தடவையும் சோழி, சங்கு, ராவணன் விழி எல்லாம் வாங்கி வந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் இத்தனே சோழி எப்படி வரும்?"

"இருக்கலாம். எனக்கு அவ்வளவு தாரம் துப்பறியும் திறமை இல்லை. ஆனல் ஒரு விஷயம் எனக்குத் தெரியும். எங்கள் அப்பா ராமேசுவரம் போய்த் தவம் கிடந்து என் னைப் பெற்ருர். உங்கள் அப்பா வேண்டாம் வேண்டாம் என்று இருக்கிறபோதே நீ பிறந்தாய்.”

கோமதிக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. 'உங் களுக்கு ஞானகிருஷ்டி உண்டோ?" -

'இதற்கு ஞானதிருஷ்டி எதற்கு? நீ உங்கள் வீட்டில் நாலாவது பெண். உன் அக்காவுக்குச் சம்பூர்ணம் என்று பெயர் வைத்திருக்கிருாே உன் அப்பா. அதுவே சொல் லாதா, நீ வரவேற்பில்லாமலே உலகிற் குடிபுகுந்தவள் என்று? -

'அதற்காக, நான் பிறந்தவுடன் என் கழுத்தை முறித்துப்போடவில்லை என்று குற்றம் சுமத்துகிமீர் களோ?" கோமதியின் தொனியில் அழுகைகூடக் கலந்துவிடும்போல் தோன்றியது. - - 'சீ, பைத்தியம்! உன்னை யார் வரவேற்ருலும் வர வேற்காவிட்டாலும் எங்கள் வீடும் என் உள்ளமும் வர வேற்றன, ராணியாக ரம்பையாக ஏற்றுக்கொண்டு விட்டன என்பதை மறந்துவிட்டாயோ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/116&oldid=592219" இலிருந்து மீள்விக்கப்பட்டது