பக்கம்:பவள மல்லிகை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோடி மாப்பாச்சி 111.

'போதுமே உங்கள் ஸ்தோத்திரம் கிள்ளுகிறது, பிறகு தொட்டிலே ஆட்டுகிறது. இந்தக் கலையில் நீங்கள் கெட்டிக்காரர்கள்தாம்.'

"அப்படிச் சொல்லாதே! இதெல்லாம் இட்டிலிக்குச் சட்டினிபோல, அல்வாச் சாப்பிட்ட வாய்க்கு மிக்ஸ்சர் தருவது போலே!"என்று சொல்லிச் சிரித்தான் சங்கரன். 'ரொம்ப அழகுதான் போங்கள். கரிந்துபோன மரப்பாச்சியை மாற்றவேண்டுமென்று ஆரம்பித்தேன். பதில் மரப்பாச்சி வாங்கிவா வக்கில்லை. இட்டிலியாம் சட் டினியாம், அல்வாவாம் மிக்ஸ்சாாம்!” -

'கோபங்கொள் ளா தடி மானே உன்றன் குறிப்பை அறிந்துநான் ஏவல்செய் வேனே" என்று முதல் நாள் பார்த்த சினிமாவில் இருவரும் கேட்டு ரசித்த பாட்டைப் பாடினன் சங்கரன். கோமதிக்கு இருந்த கோபமெல்லாம் எங்கேயோ போய்விட்டது. களுக்கென்று சிரித்துவிட்டாள்.

“சரி, விளையாடாதீர்கள். மரப்பாச்சி அகப்படுமா, அகப்படாதா, சொல்லுங்கள்” என்ருள் கோமதி.

மறுபடியும் சங்கரன் சிறிது யோசனையில் ஆழ்ந்தான். பிறகு, எங்கே, அந்த இரண்டு மரப்பாச்சிகளையும் எடுத் துக்கொண்டு வா; பார்க்கிறேன்' என்ருன். -

அவள் இரண்டு பெரிய மாப்பாச்சிகளையும் எடுத்துக் கொண்டு வந்தாள். ஒவ்வொன்றும் ஒரு முழ உயரம் இருந்தது. ஒன்று ஆண்; ஒன்று பெண். ஆண் மரப் பாச்சியின் பீடத்திலும் காலிலும் நெருப்பில் எரிந்து பொக்கையான இடங்கள் இருந்தன. "பார்த்தீர்களா? இந்த ஆண் மரப்பாச்சிக்குப் பதில் ஒன்று கிடைத்தால் நன்ருக இருக்கும்; கிடைக்குமா?’ என்று கோமதி கேட் to-såss,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/117&oldid=592222" இலிருந்து மீள்விக்கப்பட்டது