பக்கம்:பவள மல்லிகை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பவள மல்லிகை

சங்கரன் அந்த இரண்டையும் பார்த்தான். கருகிய மரப்பாச்சியை வாங்கினன். கொஞ்ச நேரம் கையில் வைத்துக்கொண்டிருந்தான். ஏதோ யோசனையில் ஆழ்ந் தவய்ைப் பிறகு பெருமூச்சுவிட்டான்.

“என்ன, இப்படி அடிக்கடி யோசிக்கிறீர்களே? என்று கோமதி கேட்டாள்.

'ஒன்றும் இல்லை. இந்த இரண்டு மரப்பாச்சிகளையும் பிரிக்கக்கூடாது. இது கரிந்திருந்தாலும் குற்றம் இல்லை. ஆடை அலங்காரத்தால் பார்க்கிறவர் கண்ணுக்குத் தெரி யாமல் மறைத்துவிடலாம்” என்று சங்கரன் சொன்னன். 'அதை மறைக்கலாம்; ஆனல் மூளி மூளிதானே?” என்று கேட்டாள் கோமதி.

“அது பார்க்கிறவர் கண்ணுக்கு மூளியாகத்தான் இருக்கிறது. ஆனல் அது வாழ்க்கையில் பெரிய மூளியை மறக்கச் செய்தது என்பதை உணர்ந்தால் மூளியாகத் தோன்றது.” . * “என்ன இது? புதிர் போடுகிறீர்களே!” ஆமாம். விஷயம் தெரிகிறவரைக்கும் அது புதிர் தான். எங்கள் அம்மா இந்த மரப்பாச்சிய்ைக் கண்போல் பாதுகாத்து வந்தாள். இதையே கொலுவில் வைத்துக் கொண்டாடினள். இதுதான் அவள் பிற்கால வாழ்க்கை யில் ஆறுதல் தந்தது. கதையைக் கேட்கிருயா?

'சொல்லுங்கள்; கேட்கிறேன்.” கோமதி அப்படியே கீழே உட்கார்த்துகொண்டாள்.

  • * ,菇

எங்கள் அப்பாவை நீ பார்த்ததில்லை. எனக்கே அவர்

ஞாபகம் சரியாக இல்லை; கனவில் கண்டதுபோல. இருக் கிறது. எங்கள் ஊரில் அம்மா பிறந்த வீடும் எங்கள் வீடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/118&oldid=592225" இலிருந்து மீள்விக்கப்பட்டது